ஜிப்மரில் எம்.பி.பி.எஸ்., படிப்பு மறுக்கப்பட்ட மாணவர்கள் தர்ணா

ஜிப்மர் மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, இடம் மறுக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோருடன் நேற்று தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் உள்ள 200 எம்.பி.பி. எஸ்., இடங்களுக்கு அகில இந்திய அளவில்
நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இதில், புதுச்சேரி மாணவர்களுக்கு, 54 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதனிடையே ஏனாமை சேர்ந்த மாணவி நக்லரேஷ்மா, மாகேவைச் சேர்ந்த ராகுல் பிரதீப், புதுச்சேரியை சேர்ந்த சாவன்த் கிருஷ்ணா, யது நந்தன், சவுமியா ஆகியோர் புதுச்சேரி இட ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் பெற்றோர்கள் புதுச்சேரியில் பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த மாணவர்கள் அனைவரும் பத்தாம் வகுப்பு முடித்ததும், வெளி மாநிலங்களில் பிளஸ் ௨ முடித்துவிட்டு, ஜிப்மர் மருத்துவ நுழைத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால், அவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேரும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜிப்மர் கலையரங்கில், எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.

அப்போது இடம் மறுக்கப்பட்ட மாணவர்கள் அவர்களது பெற்றோர்களுடன் ஜிப்மர் கலையரங்கம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...