தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணி யாற்றி, ஓய்வு பெற்று மூன்று ஆண்டுகள் ஆகி யும், பணப்பலன் கிடைக்காமல், 10 ஆயிரம் பேர் தவித்து வருகின்றனர்.அத்துடன்,பல சிக்கல் களால், போக்குவரத்து கழகங்களுக்கு, ஆண்டுக்கு, 1,200 கோடி நஷ்டம் ஏற்படுவதை தடுக்க, தமிழக அரசு
சிறப்புக்கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தமிழகத்தில், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உட்பட, எட்டு போக்குவரத்து கழகங்கள் உள்ளன. 23 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின் றன. 1.4 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். தினமும், 2.5 கோடி பேருக்கு மேல் பயன் பெறுகின்றனர்.
இந்த போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி, 2013 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு, பணப்
பலன்கள் முறையாக வழங்கப்பட்டன.பின் தேதியிட்டஅதன்பின், போக்குவரத்து கழகங்க ளின் நிதி தள்ளாட்டம் காரணமாக, ஓய்வு பெறு வோருக்கு, பின் தேதியிட்ட காசோலையே தரப்படுகிறது. இவற்றை, உரிய நாட்க ளில் வங்கியில் செலுத்தினாலும், பணம் இன்றி திரும்புகின்றன. பல கோட்டங்களில், காசோலை தராமல், 'பின்னர் தருகிறோம்' என, கைகொடுத்து அனுப்பி விடுகின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில், 10 ஆயிரம் பேர் வரை ஓய்வு பெற்றுள்ளனர். இவர்கள் தங்க ளின் பணப்பலன் கேட்டு, போக்குவரத்து கழக அலுவலகங்களுக்கு நடையாய் நடந்தது தான் மிச்சம். அவர்களுக்கு சேர வேண்டிய, 750 கோடி ரூபாயை தராமல், போக்குவரத்து கழகங்கள்
நிலுவை வைத்துள்ளன. அரசு பஸ்களை,
1 கி.மீ., இயக்க, 32 ரூபாய் செலவாகிறது. வரு வாய், 28 ரூபாய் தான் கிடைக்கிறது. வரவுக் கும், செலவுக்குமான இடைவெளியை, போக்கு வரத்து கழகங்களால் சமாளிக்க முடிய வில்லை. ஆண்டுக்கு, 1,000 கோடி ரூபாய் முதல், 1,200 கோடி ரூபாய் வரை நஷ்டத்தில் தள்ளாடுகின்றன.
900 பேர் மரணம்:
நிலைமையை சமாளிக்க, தொழிலாளர்களின் பணம், 4,500 கோடி ரூபாய் வரை எடுத்து செலவு செய்து விட்டதால், ஓய்வு பெற்றவர் களுக்கு பணப்பலன் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஓய்வு பெற்றோரில், பணப் பலன் பெறாமலேயே, 900 பேர் வரை இறந்து விட்டதாகவும், தொழிற்சங்கத்தினர் கூறுகின்றனர்.
இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:போக்குவரத்து கழகங் களுக்கு, ஆண்டு தோறும், 1,000 கோடி ரூபாய் முதல், 1,200 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. நஷ்டத்தை சமாளிக்க, மாநில அரசு, சிறப்பு நிதியை விடுவிக்கும். இந்த நிதியை, அரசிடம் கோரி உள்ளோம். அரசு பெரு மளவு நிதி அளிக்கும் பட்சத்தில், ஓய்வூதிய தாரர்களுக்கான நிலுவை பணப்பலன் வழங்கப் படும்; வேறு வழி தெரியவில்லை. அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மறுசீரமைப்பு அவசியம்...:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் ஆறுமுக நயினார் கூறியதாவது:
* மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸ் வகையில், ஆண்டுக்கு, 400 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது; அரசு இதை வழங்க வில்லை
* சுங்கச்சாவடிகளில், அரசு பஸ்களுக்கான
சுங்க கட்டண வகையில், ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய் செலவாகிறது; அரசு பஸ்களுக்கு சிறப்பு சலுகை தரப்படவில்லை
* ஐந்து ஆண்டுகளுக்கு முன், 43 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் டீசல் விலை, தற்போது, 53 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால், செலவுக்கும், வருவாய்க்கும் இடையே வித்தியாசம், ஒரு கி.மீட்டருக்கு, 4 ரூபாய் வருகிறது. இந்த வகையில், ஆண்டுக்கு, 600 கோடி ரூபாய் என, மொத்தம், 1,200 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது
* தற்போது, முதியோருக்கும் இலவச பஸ் பாஸ் தரப்படுகிறது; இதுவும், சுமையாக அமையும்.
சிக்கலுக்கு தீர்வு காண, பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை. குறித்த வகைகளில், அரசு தர வேண்டிய தொகையைக் கொடுத்தாலே, வரவுக்கும், செலவுக்குமான இடைவெளி குறைந்து, போக்குவரத்து கழகங் கள் நஷ்டத்தில் இருந்தும் தப்பும். இதற்கு, தமிழக அரசு, போக்குவரத்துறையில் மறு சீரமைப்பு நடவடிக்கைகள் எடுப்பது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.
ஊதிய உயர்வு பேச்சு: அரசு மவுனத்தால் அதிருப்தி:
போக்குவரத்து ஊழியர்களுக்கான, 13வது ஊதிய ஒப்பந்தத்தை, செப்., 1ல் அமல்படுத்த வேண்டும். மத்திய அரசின் சம்பள கமிஷன் பரிந்துரைத்த, 23.55 சதவீத ஊதிய உயர்வு அடிப்
படையில், பேச்சுவார்த்தையை, இம்மாதம் நடத்தி இருக்க வேண்டும். இதுவரை, அதற்கான அறிகுறி இல்லை.
முந்தைய, 12வது ஊதிய ஒப்பந்த அடிப் படையில், 20 சதவீதம் நிலுவை தொகையும் இன்னும் கிடைக்கவில்லை. இதனால், கடும் அதிருப்தியில் உள்ள, போக்குவரத்து தொழிற் சங்கங்கள், செப்., 2ல் நடக்கும், அகில இந்திய ஸ்டிரைக்கில் பங்கேற்கின்றன.