ஆதிவாசிகளுக்கு சேவையாற்றும் ரகுராம் ராஜனின் ஐ.ஐ.டி., பேராசிரியர்!

ஐ.ஐ.டி., பேராசிரியர் என்ற கவுரவம், லட்சணக்கனக்கில் மாத சம்பளம் இவை அனைத்தையும் உதறிவிட்டு கடைகோடி மனிதர்களான ஆதிவாசிகளின் நன்மைக்காக 32 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றி வருகிறார் அலோக் சாகர்.







டில்லியில் பிறந்த அலோக் டில்லி ஐ.ஐ.டி.,யில் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றார். பின்னர் அதே கல்வி நிறுவனத்தில் முதுகலை முடித்தார். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹவுஸ்டன் பல்கலை பி.எச்.டி., பட்டம் பெற்றார். 64 வயதான அலோக் சாகரின் தந்தை ஐ.ஆர்.எஸ்., அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். தாய் டில்லி பல்கலையில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றியவர். அவருடைய சகோதரர் டில்லி ஐ.ஐ.டி.,யில் பேராசிரியராக பணி செய்கிறார்.



தான் படித்த டில்லி ஐ.ஐ.டி.,யிலேயே பேராசிரியாக பணிக்கு சேர்ந்தார். ஆனால், சில காலம் மட்டுமே அப்பணியில் இருந்தார். முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுக்கு 1980 ஆம் ஆண்டில் பாடம் நடத்தியுள்ளார். 1982ல் தன் பேராசிரியர் பணியை ராஜினாமா செய்த அவர் தன் வாழ்நாள் முழுவதையும் கடைகோடியில் இருக்கும் பழங்குடியினர்களின் நலனுக்காக அர்ப்பணித்துள்ளார்.



மத்திய பிரதேச மாநிலம் ஹோசங்காபாத் மாவட்டத்தில் உள்ள பேடுல் என்னும் பழங்குடியினர் வசிக்கும் கிராமத்திற்கு சென்று தங்கினார். கிட்டதட்ட 32 ஆண்டுகளாக பழங்குடியினர்களின் நலனுக்காக பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.



சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை கொண்ட இவர் இதுவரை 50 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்துள்ளார்.இவர் 60 கி.மீ., வரை நடந்து சென்று பக்கத்தில் இருக்கும் கிராமங்களுக்கு விதைகளை விநியோகிப்பார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பழங்குடியினர் நலனுக்காக சிராமிக் ஆதிவாசி சங்காதன் என்னும் அமைப்பை உருவாக்கி அயராது உழைத்து வருகிறார்.



இயற்கையுடன் இணைந்து வாழ்வதை விரும்பும் அவர் " இந்தியாவில் மக்கள் பல விதமான பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். ஆனால், நம்மில் பலரும் பிரச்னையில் இருக்கும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதை மறந்துவிட்டோம். நாம் அறிவுஜீவிகள் என்பதை நிரூபிக்க டிகிரிகள் வாங்குவதற்கு ஓடி கொண்டிருக்கிறோம்" என்கிறார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...