ஒரு பழமொழி உண்டு. முன் ஏர் சரியாக சென்றால், பின் ஏரும் சரியாக செல்லும் என்பார்கள். அதாவது விவசாய நிலத்தில் விவசாயிகள் வரிசையாக 4,5 ஜோடி மாடுகளை வைத்து ஏர் கலப்பை மூலம் உழவு செய்வார்கள். அதில் முன்னாள் செல்லும் மாடு எந்த திசையில் உழுதபடி செல்கிறதோ, அதற்கு பின்னால்தான் மற்ற ஜோடி மாடுகளும் செல்லும். அதேபோல, ஒரு ஆட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால், நிர்வாகத்தை நடத்தும் அதிகாரிகள் திறமையானவராக, நேர்மையானவராக இருக்க வேண்டும்.
ஒரு அதிகாரி திறமையானவராக இருந்தால், நேர்மையானவராக இருந்தால் அந்த துறை எல்லா வகையிலும் சிறப்பாக செயல்படும். ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை ஐஏஎஸ் அதிகாரிகள் எவ்வளவுதான் திறமையானவர்களாக இருந்தாலும், அவர்கள் அமைச்சர்களை ஏன் அரசியல் தலைவர்களை, எம்எல்ஏக்களை அனுசரித்துத்தான் போக வேண்டிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு அதிகாரிகளும் மறைமுகமாக ஒரு காரணமாக இருந்தாலும், நமது அரசியல் சூழ்நிலை அதிகாரிகளை அந்த சூழ்நிலைக்கு தள்ளிவிட்டுள்ளதாக கூறுகின்றனர். நேரடியாக தேர்வான ஐஏஎஸ்: நேரடி ஐஏஎஸ் தேர்வு பெற்றவர், முதலில் மாவட்டங்களில் ஏதாவது ஒரு உட்கோட்டத்தில் உதவி கலெக்டராக இருப்பார். அதற்கு பின், மாவட்ட வருவாய் அதிகாரியாகவும், பின் கலெக்டராகவும் பணியாற்றுவார். குறைந்தது நேரடி ஐஏஎஸ் அதிகாரி 2 ஆண்டுகளாவது கலெக்டராக பணியாற்ற வேண்டும். அதன்பின் அவர்கள் பல்வேறு துறைகளில் துணை செயலாளர்கள், இணை செயலாளர்கள், கூடுதல் செயலாளர்கள் பின் செயலாளர்கள் அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவார்கள். அதன்பின் கூடுதல் தலைமைச் செயலாளர், தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவார்கள்.
தற்போது, மாவட்டங்களில் கலெக்டர்களாக இருப்பவர்களில் நேரடியாக ஐஏஎஸ் தேர்வு பெற்றவர்கள் குறைவானவர்களாகவே உள்ளனர். குரூப் ஒன் தேர்வு மூலம் வெற்றி பெற்றவர்கள்தான் தற்போது கலெக்டர்களாக உள்ளனர். அதற்கு காரணம், தமிழக அதிகாரிகள்தான் அமைச்சர்களை அனுசரித்துப் போவார்கள் என்பதால்தான். நேரடியாக ஐஏஎஸ் தேர்வு பெற்றவர்கள் தற்போது பல்வேறு துறைகளில் பதவிகளில் பணியாற்றுகின்றனர். துறைகளில் அமைச்சர்களை அனுசரித்து போகாததால் பலர் பந்தாடப்பட்டு வருகின்றனர். துறைகளில் பணியாற்றும் சிலரும் கொத்தடிமைகள்போல இருப்பதாக ஐஏஎஸ் அதிகாரிகளே குற்றம்சாட்டுகின்றனர். இவர்களின் கதி: முதல்வர் அலுவலகத்தில் செயலாளராகவும், முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரியாகவும் இருந்த இன்னோசென்ட் திவ்யா, தனது கணவர் அமெரிக்காவில் இருப்பதால், சில மாதங்கள் அங்கு தங்கி படிக்க விரும்புவதாக தெரிவித்தார். இதனால் கடந்த 6 மாதத்துக்கு முன் உடனடியாக செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு புதிய பணியிடம் வழங்கப்படவில்லை. இப்போதுவரை அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டுக்கும் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
சென்னை மாநகராட்சியில் துணை கமிஷனராக இருந்த விஜய் பிங்க்ளே, கான்ட்ராக்டர் ஒருவருடன் ஏற்பட்ட பிரச்னையில் அங்கிருந்து தூக்கியடிக்கப்பட்டு, டம்மியான பதவியில் அமர வைக்கப்பட்டுள்ளார். சிவில் சப்ளை கார்ப்பரேசன் கமிஷனராக இருந்த கோபாலகிருஷ்ணன், பருப்பு கொள்முதல் தொடர்பான டெண்டர் பிரச்னையில் தற்போது தூக்கியடிக்கப்பட்டு, டேட்டா சென்டரில் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மாசு கட்டுப்பாட்டுத்துறையில் செயலாளராக இருந்த ஸ்கந்தன், தன்னிடம் அனுமதி வாங்கி விட்டு அமைச்சரை சந்திக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அமைச்சர்களின் பிஏக்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் இருக்கக் கூடாது என்று உதவியாளர்களை மாற்றியதால் நேர்மையான அதிகாரி யத்தீந்திரநாத் ஸ்வேன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இப்போது அந்த துறை முதல்வரின் செயலாளராக உள்ள சிவதாஸ் மீனாவிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
தூக்கியடிக்கும் உண்மை: கைத்தறித்துறை இயக்குநராக இருந்த சகாயம், அமைச்சரின் உத்தரவுப்படி அனுசரித்து போகாததால் அண்ணா மேனேஜ்மென்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியில் கலெக்டராக இருந்த அவினாஸ்குமார், அரசு எதிர்பார்ப்புக்கு மாறாக அறிக்கை அளித்ததால், சமூக நலத்துறை துணை செயலாளராக மாற்றப்பட்டு டம்மியாக்கப்பட்டுள்ளார். ஏன் தற்போது அரசின் ஆலோசகராக இருக்கும் ஷீலா பாலகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, புதிய தலைமைச் செயலாளராக மோகன் வர்க்கீஸ் சுங்கத் நியமிக்கப்பட்டார். அரசின் எதிர்பார்ப்புக்கு ஏற்றார்போல செயல்படாததால் அண்ணா மேனேஜ்மென்ட் பிரிவுக்கு தூக்கியடிக்கப்பட்டார். வெள்ளம் தந்த தேசிகன்: ஏன் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஞானதேசிகனே, மின்வாரியத்துறையில் இருந்தார். அப்போதைய அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுடன் நெருக்கமாக இருந்தார். அவர் சொன்னபடி எல்லாம் நடந்து கொண்டார். அதற்கு பரிசுதான், தலைமைச் செயலாளர் பதவி கிடைத்தது. அப்போது கூட, அவரது அறையில் இருப்பதை விட, அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் அறையில்தான் நீண்ட நேரம் இருப்பார்.
கடந்த டிசம்பர் மாதம் வெள்ள பாதிப்புக்கு அவரும் ஒரு காரணம் என்று அப்போது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த பழனியப்பன், செம்பரம்பாக்கம் ஏரி நீர் குறித்து அறிக்கையை, ஞானதேசிகனிடம்தான் கொடுத்துள்ளார். அவர் நேரடியாக முதல்வரையோ, அவரது அலுவலக அதிகாரிகளையோ தொடர்பு கொண்டு முடிவுகளை எடுக்காமல், ஆலோசகருக்கு அனுப்பி விட்டு முடிவுக்காக காத்திருந்த சம்பவத்தால் பெரிய சேதமே ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டன.
அப்போது, காஞ்சிபுரம் கலெக்டரிடம் ஏரி நிலவரம், மீட்பு பணிகள் குறித்து கேளுங்கள் என்று ஆலோசகர், ஞானதேசிகனிடம் சொன்னபோது, அவர் கலெக்டருக்கு போன் போட்டு பேசாமல், போனை ஆலோசகரிடம் பவ்யமாக கொடுத்தாராம். இப்படி நடந்து கொண்டதற்காகத்தான் தலைமைச் செயலாளர் பதவி கிடைத்தது. அவருக்கு சீனியர் பலர் இருந்தாலும் ஞானதேசிகனுக்கு தலைமைச் செயலாளர் பதவி கிடைத்தது. தற்போது அதே வேகத்தில் தூக்கி வீசப்பட்டபோது சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டுள்ளார். ஏன் தற்போது தலைமைச் செயலாளராக உள்ள ராமமோகன ராவும் 12 சீனியர்களை ஓரம் கட்டிவிட்டுத்தான் தலைமைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் அவரது செயல்பாடுகள்தான். பதவி நீட்டிப்பு ஏன்: முதல்வரின் செயலாளராக உள்ள வெங்கட்ராமன், சிறப்பு ஆலோசகர் சாந்தா ஷீலா நாயர் ஆகியோர் கூட ஓய்வு பெற்ற பிறகு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. காரணம் அவர்களும் சொல்படி நடக்கும் தலையாட்டி பொம்மைகள்தான் என்கின்றனர். ஆனால் இப்போது தலையாட்டி பொம்மைகளாக இருக்கும் அதிகாரிகளுக்கு கூட பயம் வந்து விட்டதாம். இதனால் அமைச்சர்கள் எது சொன்னாலும் எழுத்து மூலமாக கொடுங்கள் என்கிறார்களாம்.
அதேநேரத்தில், அமைச்சர்களின் தலையீடும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டதாம். எப்போது வேண்டுமானாலும் தங்களது பதவி காலியாகலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், ஐஏஎஸ் அதிகாரிகளிடம் தாங்கள் சொன்னால்தான் எந்த பைலையும் தொட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்களாம். ஒவ்வொரு பைலுக்கும் ஒரு டம்மி நம்பர் கொடக்கப்பட்டுள்ளதாம். ஆனாலும் ஐஏஎஸ் அதிகாரிகள் நித்திய கண்டம், பூர்ண ஆயுசு என்ற நிலையில்தான் தினம், தினம் தங்களது பதவி நிலைக்குமா? இன்று ஏதாவது மாறுதல் உத்தரவு வருகிறதா? என்ற அச்சத்தில்தான் உள்ளார்களாம். மற்ற மாநிலங்களில்இதுபோன்ற நிலை இல்லை. அதனால்தான் பல ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு மாறுதல் வாங்கிச் சென்று விடுகின்றனர் என்கின்றனர் நேர்மையான அதிகாரிகள். இதேநிலை நீடித்தால் இனி ஒரு ஆண்டு அல்லது 2 ஆண்டுகளில் தமிழகம் அனைத்து துறைகளிலும் பின் தங்கிவிடும் என்று நேர்மையான அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். இப்போது தேவை கொத்தடிமைகள் நிலைமை மாறி, துணிச்சலான அதிகாரிகள் தலைமையிலான டீம்தான் என்றும் அவர்கள் அபாய மணி அடிக்கின்றனர். ஆனால் லகான் அரசு கையில்தான் உள்ளது. அவர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். ஏனெனில் மக்கள் முடிவு என்பது 5 ஆண்டுக்கு ஒரு முறைதான். இனி அவர்கள் முடிவு எடுக்க நாலரை ஆண்டுகளுக்கு மேல் உள்ளது என்கின்றனர் நேர்மையான அதிகாரிகள்.
சம்பளம் எவ்வளவு?
தலைமை செயலாளரின் சம்பளம் ரூ.2,09,280
பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிக்கு சம்பளம் ரூ.52,530
91 ஐஏஎஸ் பணியிடங்கள் காலி
தமிழகத்தில் மொத்தம் 376 ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்க வேண்டும். நேரடி ஐஏஎஸ் அதிகாரிகள் 262 பதவிகளும், குரூப் ஒன் தேர்வு மூலம் ஐஏஎஸ் ஆகும் 114 பேர் இருக்க வேண்டும். கடந்த ஜனவரி மாதம் வரை 285 பேர்தான் ஐஏஎஸ் அதிகாரிகளாக உள்ளனர். அதில் 198 பேர் நேரடி ஐஏஎஸ்கள், 87 பேர் பதவி உயர்வு மூலம் ஐஏஎஸ் ஆனவர்கள். மேலும் 91 ஐஏஎஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன.