தொலைநிலைக் கல்வி தேர்வில் முறைகேடு நடந்துள்ளதால் 400 மாணவர்கள் சேர்க்கை தேர்வை ரத்து செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் பரிந்துரைத்தது. மதுரை காமராஜர் பல்கலை தொலைநிலைக் கல்வியின் கீழ், தர்மபுரி கல்வி மையம் தேர்வு நடத்தியது. இந்நிலையில், தேர்வில் முறைகேடு நடந்ததால் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், தர்மபுரி குளோபல் அகாடமி ஃபார் மேனேஜ்மென்ட் ஒருங்கிணைப்பாளர் நவீன்குமார் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “எங்கள் கல்வி மையம், மதுரை காமராஜர் பல்கலையால் பதிவு செய்யப்பட்டது. தொலைநிலைக் கல்வி மையம் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த 2013ஆம் ஆண்டு பல்கலையுடன் ஒப்பந்தம் செய்தோம். இந்நிலையில், 2015-16 கல்வி ஆண்டில் எங்கள் மையம்மூலம், 400 மாணவர்கள் தொலைநிலைக் கல்வியின் கீழ் படித்தனர். வேலுார் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மையத்தில், 2015ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி மாணவர்கள் தேர்வு எழுதினர். ஓராண்டுக்கு மேலாகியும், விடைத்தாளை மதிப்பீடு செய்யவில்லை. இதனால் தேர்வு முடிவு வெளியாகவில்லை. எனவே விடைத்தாள்களை மதிப்பீடு செய்து தேர்வு முடிவை வெளியிட உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி வி.பாரதிதாசன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்கலைக்கழகத் தேர்வு, ஒழுங்கு மற்றும் மாணவர்கள் நலக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பல்கலை வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அதில், தேர்வு 2015ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதி முதல் ஜுன் மாதம் 5ஆம் தேதி வரை நடந்தது. தர்மபுரி மையத்தைச் சேர்ந்த 400 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என விசாரணையில் தெரிய வந்துள்ளது. தேர்வு எழுதியதாக கூறுவதில், முறைகேடு நடந்துள்ளதாக முடிவுக்கு வருகிறோம். எனவே, 400 மாணவர்களின் தேர்வு மற்றும் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும். அவர்களை மீண்டும் பல்கலையில் எந்த படிப்பிலும் சேர அனுமதிக்கக் கூடாது. தர்மபுரி மையத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என பரிந்துரைக்கிறோம் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி செப்டம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இது குறித்து பல்கலை வழக்கறிஞர், “குழுவின் பரிந்துரை, நடவடிக்கைக்காக உயர்கல்வித்துறை செயலரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.