கடந்த 2014ஆம் ஆண்டு, வாட்ஸ்-அப்பை ஃபேஸ்புக் வாங்கியது. அதன் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி தனிநபர் கொள்கைகளில் மாற்றங்கள் செய்தது. அதன்படி, வாட்ஸ்-அப்பை பயன்படுத்துபவர்களின் தொலைபேசி எண்கள், பயன்படுத்தும் சாதனம் குறித்த தகவல்கள், இயங்குபொருள் (OS) வகைப்பாடு, ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் போன்ற விவரங்களை
ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளலாம். பகிர்ந்து கொள்ள விரும்பாதவர்கள் வெளியேற வரும் 25ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாட்ஸ்-அப் பயன்படுத்துபவர்களின் தகவல்கள் உள்ளிட்ட எந்த விவரத்தையும் அவர்களின் ஒப்புதல் இல்லாமல் ஃபேஸ்புக்கில் பரிமாறக்கூடாது எனவும், புதிய தனிநபர் கொள்கையை எதிர்த்தும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.ரோகினி மற்றும் நீதிபதி சங்கீதா திங்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாட்ஸ்-அப் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த்த லுத்ரா, ‘வாட்ஸ்-அப் பயன்படுத்துபவர்கள் அவர்களுடைய கணக்கை நீக்கிவிட்டாலோ அல்லது வாட்ஸ்-அப்பில் இருந்து வெளியேறிவிட்டாலோ அவர்களை பற்றிய எந்த தகவலும் சர்வரில் இருக்காது. பதிவு செய்த தகவல் அதன் உரிமையாளருக்குச் சென்று சேராவிட்டாலும் சர்வரில் இருந்து அழிக்கப்பட்டு விடும். புதிய என்கிரிப்ஷன் முறையால் மூன்றாம் நபர் யாரும் இந்த தகவல்களை பார்க்க முடியாது’ என்று கூறினார். இருதரப்பு வாதங்களை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பான உத்தரவை நாளை பிறப்பிப்பதாகக் கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.