தேர்தலை நடத்த வேண்டியது ஆணையமா? நீதிமன்றமா?

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்ட தனி நீதிபதி கிருபாகரனின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் மேலும் நான்கு வாரங்களுக்கு தடையை நீடித்து உத்தரவிட்டதோடு, நான்கு வாரங்களுக்குள் திமுக பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் எஸ்.டி. பிரிவினருக்கு தகுந்த இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று திமுக

சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு கடந்த 4ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது திமுக-வின் மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், ‘தமிழக அரசு எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை என்று மனுதாரர் கூறுவதை ஏற்கவில்லை. அதேநேரம், ‘உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு அவசர கதியில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின்படி, இந்தத் தேர்தல் அறிவிப்பு வெளியிடவில்லை. எனவே, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்கிறேன். பஞ்சாயத்து சட்டவிதிகளைப் பின்பற்றி, முறையான கால அவகாசத்துடன் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டார். கடந்த 4ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு கடந்த 6ஆம் தேதி நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், பார்த்திபன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனி நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த தீர்ப்புக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டார்கள்.

இந்த வழக்கு, நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் குமார், தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் முத்துகுமாரசாமி, திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள். அவற்றின் விவரம் பின்வருமாறு:

மூத்த வழக்கறிஞர் குமார்: திமுக தொடர்ந்த வழக்கில், உள்ளாட்சித் தேர்தலை ரத்துசெய்ய வேண்டும் என்றோ, வேட்பாளர்கள் தங்களது குற்றப்பின்னணி குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்றோ கேட்கவில்லை. ஆனால் தனி நீதிபதி கிருபாகரன் தமிழக அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் 9 வழிகாட்டுதல்களைப் பிறப்பித்துள்ளார். அதில், வேட்பாளர்கள் தங்களது குற்றப்பின்னணி விவரங்களை வேட்புமனுவில் குறிப்பிடவில்லை என்றால், அந்த வேட்புமனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் இந்த உத்தரவு இந்த வழக்கில் தொடர்பில்லாதது. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றால், தமிழக பஞ்சாயத்து சட்டத்தில் புதிய சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும்.

நீதிபதிகள்: இப்படி ஏன், தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்? உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டியது மாநில தேர்தல் ஆணையமா? அல்லது இந்த நீதிமன்றமா?

மூத்த வழக்கறிஞர் வில்சன்: 9 வழிகாட்டுதல்களுடன் இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததில் எந்தத் தவறும் இல்லை. ஏற்கனவே உச்சநீதிமன்றம் தேர்தல் தொடர்பான வழக்கில் இதேபோன்ற வழிகாட்டுதல்களை கடந்த 2002ஆம் ஆண்டே பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில்தான், தனி நீதிபதி கிருபாகரனும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு இதுபோன்ற உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

நீதிபதிகள்: தேர்தல் நடத்துவது என்பது தேர்தல் ஆணையத்தின் பணி. வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை வேட்புமனுவில் குறிப்பிட வேண்டும். அவ்வாறு குறிப்பிடவில்லை என்றால் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்றெல்லாம் இந்த ஐகோர்ட்டு உத்தரவிட முடியுமா? உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது இந்த ஐகோர்ட்டின் பணியா? அல்லது மாநில தேர்தல் ஆணையத்தின் பணியா?

வில்சன்: இரவோடு இரவாக தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுவிட்டனர். ஆளும் கட்சியினருக்கு எந்தத் தொகுதி? யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது? என்று தெரியும். அப்படிச் செய்ததால்தான் இந்த குழப்பம் ஏற்பட்டது. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தில் புதிய விதிகளை உருவாக்குவது ஒன்றும் கடினம் இல்லை.

நீதிபதிகள்: இந்த வழக்கை 4 வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம். இந்த மேல்முறையீட்டு வழக்கிற்கு தமிழக அரசும், எதிர் மனுதாரர் திமுக-வும் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். தற்போது உள்ளாட்சித் தேர்தலை எப்போது நடத்தப்போகிறீர்கள்?

பி.குமார்: தனி நீதிபதி 9 வழிகாட்டுதல்களைப் பிறப்பித்துள்ளதால், அதுகுறித்து தமிழக அரசு பஞ்சாயத்து சட்டத்தில் விதிகளை உருவாக்க வேண்டும். அதுதொடர்பான சட்டத் திருத்தங்களை கொண்டுவந்த பின்னர்தான் தேர்தல் ஆணையத்தால் தேர்தல் அறிவிப்பை வெளியிடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...