தமிழகத்தை மிரளவைக்கும் மர்ம காய்ச்சல் ,மாணவர்கள் தொடர்த்து பாதிப்பு !



தமிழகத்தில் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் மர்ம காய்ச்சலுக்கு தேனி மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டிபட்டி அருகே உள்ள எரதிமக்காள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய 14 வயது மகன் கலைச்செல்வன்.
ஒக்கரைப்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். அவர், கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து, அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்துள்ளனர். இருந்தபோதும் காய்ச்சல் அதிகரித்ததால், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் உரிய சிகிச்சையளிக்காததால்தான் கலைச்செல்வன் இறந்துள்ளார் என்று உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவலை அறிந்துவந்த போலீஸார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆர்ப்பாட்டத்தை தடுத்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் மர்ம காய்ச்சலால் ஒன்பது குழந்தைகள் உள்பட 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் திருச்சியில் இரண்டு பெண்கள், ஒரு ஆண் பலியாகியுள்ளனர்.

சமீபத்தில், சென்னை எழும்பூர் குழந்தை நல மருத்துவமனையில் மூன்று குழந்தைகள் மர்ம காய்ச்சலுக்குப் பலியானது குறிப்பிடத்தக்கது.

இப்படி தொடர்ச்சியாக, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மர்ம காய்ச்சலுக்குப் பலியாகி வருகின்றனர். ஆனால் அரசு இதுவரைக்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...