டிசம்பர் 30–ந் தேதிவரை வங்கிகளில் ரூ.2½ லட்சத்துக்கு மேல் யார் யார் டெபாசிட் செய்தால் நடவடிக்கை !!

வருமான அளவை மீறி வங்கியில் டெபாசிட் செய்தால் ஆபத்து வரியுடன் 200 சதவீத அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிப்பு.


வருமான அளவை மீறி வங்கியில் டெபாசிட் செய்பவர்களுக்கு வருமான வரியுடன் 200 சதவீத அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு திடீரென அறிவித்துள்ளது.


வங்கிகளில் செலுத்தலாம்

ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்றுமுன்தினம் அறிவித்தார். அந்த நோட்டுகளை இன்று முதல் டிசம்பர் 30–ந் தேதிவரை, வங்கி கணக்கில் உச்ச வரம்பு எதுவும் இல்லாமல் செலுத்தலாம் என்றும் அறிவித்தார். அதனால், நேற்றைய விடுமுறைக்கு பிறகு இன்று வங்கிகள் திறக்கும்போது, கணக்கில் பணம் செலுத்த மக்கள் தயாராக இருந்தனர்.

இந்நிலையில், மத்திய அரசு நேற்று இரவு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. வருமான அளவை மீறி பணம் செலுத்தினால், வரியுடன் அபராதம் செலுத்த நேரிடும் என்று அறிவித்தது. இதுகுறித்து மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா கூறியதாவது:–

அபராதம்

டிசம்பர் 30–ந் தேதிவரை வங்கிகளில் ரூ.2½ லட்சத்துக்கு மேல் யார் யார் டெபாசிட் செய்கிறார்களோ, அவர்களின் விவரங்களை கேட்டுப் பெறுவோம். அவர்கள் டெபாசிட் செய்த தொகையை, அவர்கள் ஏற்கனவே தாக்கல் செய்த வருமான வரி கணக்குடன் ஒப்பிட்டு பார்ப்போம். அவர்கள் டெபாசிட் செய்த தொகை, அவர்களின் வருமான அளவுக்கு பொருந்தாத வகையில் இருந்தால், அது வரி ஏய்ப்பாக கருதப்படும்.

அத்தகைய நபர்களுக்கு வருமான வரி சட்டத்தின் 270(ஏ) பிரிவின் கீழ், வருமான வரியுடன் 200 சதவீத அபராதமும் விதிக்கப்படும்.

நகை வாங்க பான் கட்டாயம்

வீட்டில் சேமித்த பணத்தை வங்கியில் செலுத்தும் சிறு வணிகர்கள், குடும்பத்தலைவிகள், கைவினைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் வருமான வரித்துறையை நினைத்து பயப்பட தேவையில்லை. அவர்கள் ரூ.2 லட்சம்வரை டெபாசிட் செய்தால், வருமான வரித்துறையின் தொந்தரவு இருக்காது.

நகைக்கடைகளில் தங்க நகை வாங்குபவர்கள், வருமான வரி ‘பான்’ எண்ணை அளிக்க வேண்டும். அதை உறுதி செய்யுமாறு கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். ‘பான்’ எண்ணை வாங்காத நகைக்கடை அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...