கணவர் உயிரோடு இருக்கும்போது பெண்களுக்கு விதவை ஓய்வூதியம் !!

 அதிகாரி மீது 6 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் ஐகோர்ட்டில் தமிழக அரசு உத்தரவாதம்


சென்னை,கணவர் உயிரோடு இருக்கும்போது, பெண்களுக்கு விதவை ஓய்வூதியம் வழங்கிய அதிகாரி மீது 6 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் உத்தரவாதம்
அளிக்கப்பட்டுள்ளது.சென்னை, வீரராகவபுரத்தை சேர்ந்தவர் கோவி.தியாகராஜன். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–நலத்திட்ட உதவிகள்

மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், முதியோர் ஆகியோருக்கு மாதந்தோறும் உதவி தொகை வழங்கும் விதமான பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசும், தமிழக அரசும் வழங்கி வருகின்றன.திருவேற்காடு நகராட்சியில் 16–வது வார்டு கவுன்சிலராக தே.மு.தி.க.வை சேர்ந்த இளையராஜா என்பவர் உள்ளார். இவர், இந்த நலத்திட்டங்களை தன்னுடைய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு பெற்றுக்கொடுத்துள்ளார். ஆனால், அந்த நபர்களில் பலர் இந்த நல உதவிகளை பெற தகுதியில்லாதவர்கள்.விதவை ஓய்வூதியம்

கணவர் உயிரோடு இருக்கும்போது பல பெண்களுக்கு, விதவை ஓய்வூதியத்தை கவுன்சிலர் பெற்றுக்கொடுத்துள்ளார். இதுபோல, ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. இதுகுறித்து சமூகநலத்துறை இயக்குனர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு புகார் செய்தும் எந்த பயனும் இல்லை.  இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ‘இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தவேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று சமூக நலத்துறை இயக்குனருக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.அதிகாரிகள் மீது நடவடிக்கை

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–விதவை ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டத்தின் கீழ் பணத்தை பெற்ற தகுதியில்லாத 26 நபர்களிடம் இருந்து, அந்த தொகையை வசூலிக்க கடந்த 3–ந் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்ட அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வசூலிக்கவேண்டும்

இந்த நடவடிக்கை அனைத்தும் 6 மாதங்களுக்குள் செய்து முடிக்கப்படும் என்று இந்த ஐகோர்ட்டுக்கு, சிறப்பு அரசு பிளீடர் உத்தரவாதம் அளித்துள்ளார். மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘தகுதியில்லாத நபர் என்று 26 பேரை மட்டுமே அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். ஆனால், 2009–ம் ஆண்டு முதல் 2013–ம் ஆண்டு வரை தகுதியில்லாத நபர்கள் பலர் இதுபோன்ற நலத்திட்டங்களில் இருந்து நிதியுதவிகளை பெற்று முறைகேடு செய்துள்ளனர்’ என்று கூறினார்.எனவே, இந்த குற்றச்சாட்டு குறித்தும் அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தவேண்டும். அந்த விசாரணையில், இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அரசின் நிதியுதவிகளை பெற்ற தகுதியில்லாத நபர்களிடம் இருந்து அந்த தொகையை வசூலிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.  இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...