உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு புதிதாக 1,900 கோடி கரன்சி நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் கூறினார்.
ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்ட கடந்த மாதம் 8-ஆம் தேதிக்குப் பிறகு, எத்தனை ரூபாய்
நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன என்ற விவரத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டது இதுவே முதல் முறையாகும்.
மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் பேசியதாவது: ரூபாய் நோட்டு வாபஸுக்குப் பிறகு, ரூ.500, ரூ.1,000 பழைய நோட்டுகளாக இதுவரை ரூ.11.55 லட்சம் கோடி வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால், மக்களுக்கு சிரமங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ரூபாய் நோட்டுகள், பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மை, வரி பிரச்னைகள் குறைவது, மின்னணு பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கும். வங்கிகளில் இருந்து பணத்தை எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு எப்போது நீக்கப்படும் எனத் தெளிவாகத் தெரியவில்லை என்றார் அவர்.