பிரதமர் நரேந்திர மோடி டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்து 1978–ம் ஆண்டு பி.ஏ., பட்டம் பெற்றார் என்பதில் சர்ச்சை உள்ளது.இந்த நிலையில் நீரஜ் என்பவர், அந்த ஆண்டு, டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படித்து தேறிய மாணவர்களின் எண்ணிக்கை, தேர்வு எழுதிய மாணவர்களின் பதிவு எண்கள், தந்தையின் பெயர்களுடன் மாணவர்களின் பெயர்கள், தேறினார்களா அல்லது தோல்வி
அடைந்தார்களா என்ற விவரம், மதிப்பெண்கள் ஆகியவற்றை வழங்க வேண்டும் என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் கேட்டார்.ஆனால் டெல்லி பல்கலைக்கழகம் தர மறுத்து விட்டது. இதுபற்றி அதன் மத்திய தகவல் அதிகாரி மீனாட்சி சகாய் குறிப்பிடுகையில், ‘‘கேட்கப்பட்டுள்ள தகவல், மாணவர்களின் தனிப்பட்ட தகவல்கள். இதை வெளிப்படுத்துவதில் பொது நலன் எதுவும் இல்லை’’ என்றார்.மேலும், அந்த காலகட்டத்தில் கணினி மயமாக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். ஆனால் இதை தகவல் ஆணையம் ஏற்கவில்லை.அத்துடன், ‘அந்த ஆண்டில் பி.ஏ. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களின் பெயர்கள், தந்தையின் பெயர்கள், தேர்ச்சி விவரங்களை பதிவேடுகளில் பார்க்க அனுமதிக்க வேண்டும், குறிப்பிட்ட பக்கங்களின் சான்றளித்த நகல்களை இலவசமாக வழங்க வேண்டும்’ என டெல்லி பல்கலைக்கழகத்துக்கு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.