ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஏற்றுக் கொண்டதால், ராஜினாமா கடிதத்தை பன்னீர்செல்வம் திரும்ப பெற சட்டம் இடம் கொடுக்காது என முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொரப்ஜி கூறியுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் வரை ஆளுநர் பொறுமை காக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து செய்தியாளரிடம் பேசிய அவர்,
முதலமைச்சர் பன்னீர்செல்வம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து விட்டார். அதனை ஆளுநரும் ஏற்று கொண்டுவிட்டார். அதனால் அதனை திரும்ப பெறுவதற்கு சட்டத்தில் இடமில்லை என்றார்.
எனினும் சசிகலா சம்பந்தப்பட்டுள்ள சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வெள்ளி அல்லது தி்ங்கட்கிழமை வெளிவர வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் அதற்குள்ளாக பெரும்பான்மை பலத்தை கருத்தில் கொண்டு சசிகலாவிற்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தால், தீர்ப்பின் தன்மையை பொறுத்து அவர் பதவி விலகும் சூழல் கூட உருவாகும். மேலும் ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட முடியாது. ஓ.பன்னீர்செல்வமும் தனது ராஜினாமாவை திரும்ப பெற முடியாது. எனவே இவ்விவகாரத்தில் ஆளுநரானவர் தீர்ப்பு வரும் வரை பொறுமையுடன் காத்திருப்பது அவசியமான ஒன்றாகிறது என்றார்.