சுகாதார புள்ளியியலாளர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு !!

சுகாதார புள்ளியியலாளர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 14, 15-ம் தேதிகளில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணியில் அடங்கிய வட்டார சுகாதார புள்ளியியலாளர் பதவிக்கான
எழுத்துத்தேர்வு கடந்த 2016-ம் ஆண்டு ஜுன் மாதம் 5-ம் தேதி நடத்தப்பட்டது. அதில் 4,270 தேர்வர்கள் பங்கேற்றனர்.
விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு பிற விதிகளின் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு 223 பேர் தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 14, 15-ம் தேதிகளில் நடைபெறும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...