மருத்துவ படிப்பில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை, 5 சதவீதமாக
உயர்த்தி, அரசு புதிய அரசாணை வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருத்தப்பட்ட புதிய அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில், 'மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். 50 முதல், 70 சதவீத மாற்றுத்திறனாளிகள் கிடைக்காத பட்சத்தில், 40 முதல், 50 சதவீத மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு, இதற்கு முன், 3 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.
மேலும், விபரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.