மறக்கவே முடியாத அந்த ரூ.570 கோடி பணம் யாருடையது: சிபிஐ அறிக்கை தாக்கல்!!!


 தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது திருப்பூர் அருகே பிடிபட்ட லாரிகளில் இருந்த ரூ.570 கோடி

ரூபாய் பணம் யாருடையது என்பது குறித்த அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது.

எந்த ஆவணமும் இன்றி, கண்டெய்னர் லாரிகளில் கட்டுக்கட்டாக பிடிபட்ட ரூ.570 கோடி பணம் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்துமாறு திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில், சிபிஐ தனது அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

அந்த அறிக்கையில், திருப்பூர் அருகே கைப்பற்றப்பட்ட ரூ.570 கோடி பணம் வங்கிப் பணம்தான். கோவையில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போதுதான் அந்த கண்டெய்னர் லாரிகள் பிடிபட்டதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.

கடந்த சட்டசபை தேர்தல் சமயத்தில் திருப்பூர் மாவட்டத்தில் மூன்று கண்டெய்னர் லாரிகளில் ரூ.570 கோடி பணம் கைப்பற்றப்பட்டது.  அந்தப் பணம் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான பணம் என்றும், அதன் கோவை கிளையில் இருந்து விசாகப்பட்டினம் கிளைக்கு கொண்டு செல்லப்பட்ட பணம் என்றும் தகவல்கள வெளியாகின

இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரி திமுக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் முதல்நிலை விசாரணை முடித்து சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. அப்போது, பணம் கொண்டு வரப்பட்ட கண்டெய்னர் லாரிகளின் பதிவெண்கள் போலியானவை என்று சி.பி.ஐ விசாரணையில் கண்டறியப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், ரூ.570 கோடிப் பணம் வங்கிப் பணம் என்று சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...