உடல் தகுதி இருந்தால் தான் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இனி பதவிஉயர்வு


மூத்த அதிகாரிகளால், 'ஷேப் ஒன் (shape 1)' என்ற பிரிவின் கீழ் சான்று வழங்கப்படுபவர்களுக்கு
மட்டுமே பதவி உயர்வு என்ற முறை மத்திய துணை ராணுவப் பிரிவில் மட்டும் தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த முறையை ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதிலும் கடைபிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மனநல ஆரோக்கியம், கேட்கும் திறன், பார்வை திறன், உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட உடல் தகுதிகள் கொண்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சகம் சார்பில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றது போல் ஐபிஎஸ் பதவி உயர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வரவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை தொடர்பாக கருத்துக்களை அனுப்பவும் மாநில அரசுகளை உள்துறை விவகாரங்களுக்கான அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளும் அடுத்தநிலை பதவி உயர்வு பெற கட்டாயம் உடல் தகுதி சான்று பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அரசு மருத்துவமனைகள் அல்லது மருத்துவ குழுவால் இந்த சான்று அளிக்கப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக டிஐஜி, ஐஜி, ஏடிஜி, டிஜி நிலையிலான அதிகாரிகளுக்கு இந்த உடல் தகுதி கட்டாயம் இருக்க வேண்டும்.
இத்தகைய உடல் தகுதி இருந்தால் மட்டும் சுறுசுறுப்பாக பணியாற்றி கலவரம் போன்றவற்றை தடுத்து, நெருக்கடி சமயங்களில் சட்ட ஒழுங்கை காக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு பெறுவதற்கு முன் வாரத்திற்கு குறைந்தது 3 பயிற்சிகள் வீதம் நீச்சல் உள்ளிட்டவைகளை முடித்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...