இலவச பஸ் பாஸ் வழங்குவதில்... இழுபறி! மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்கள்!!!


பள்ளி
மாணவர்களை டிக்கெட் வாங்க நிர்பந்திப்பதும், தவறினால் நடு வழியில் இறக்கி விடப்படுவதால் மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
திறந்து ஒரு மாதமாகியும் இன்னமும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படாததால்

கல்வியை ஊக்குவிக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆரம்ப கல்வியை முடிக்கும் கிராமப்புற மாணவர்கள், அருகாமையில் உள்ள நகரங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உயர்கல்வியை தொடர வசதியாக 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக கல்வி ஆண்டு துவங்கியதும், போக்குவரத்துக்கழகம் சார்பில் ஒவ்வொரு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு தேவையான அளவிற்கு இலவச பஸ் பாஸ்க்கான படிவம் வழங்கப்படும். அதனை ஆசிரியர்கள் பஸ் பாஸ் பெற உள்ள மாணவர்களின் முழு விபரங்களையும் பூர்த்தி செய்து, படிவத்தில் மாணவனின் புகைப்படம் ஒட்டி, அதன் விபரங்களை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்து, அதனை 'சிடி'யாக தயார் செய்து அருகாமையில் உள்ள போக்கவரத்துக்கழக பணிமனையில் ஒப்படைக்க வேண்டும்.
அதன்பேரில் போக்குவரத்து கழக அதிகாரிகள் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி, பிரத்யேக பார் கோடுடன் பஸ் பாஸ் தயார் செய்து பள்ளிகள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும். அதன்படி கடலுார் மாவட்டத்தில் கடந்தாண்டு 82 ஆயிரத்து 250 மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
இப்பணி வழக்கமாக ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும். ஆனால் என்ன காரணத்தினாலோ இந்தாண்டு பள்ளி திறந்து ஒரு மாதம் முடிந்த நிலையில் இன்னமும் போக்குவரத்துக்கழகத்தில் இருந்து பள்ளிகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை. மாறாக புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை மாணவர்கள் கடந்தாண்டு பஸ் பாஸை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும், பஸ்களில் பயணிக்கும் போது மாணவர்கள் சீருடை அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
ஆனால், நடைமுறையில் பல பஸ்களில் பயணிக்கும் பள்ளி மாணவர்களை கண்டக்டர்கள் டிக்கெட் எடுக்கச் சொல்லி நிர்பந்திக்கின்றனர். மறுக்கும் மாணவர்கள் நடு வழியில் இறக்கி விடப்படுகின்றனர். இதனால், கிராமங்களில் இருந்து வரும் ஏழை, எளிய மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதோடு, நடுவழியில் இறக்கி விடப்படுவதால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இலவச பஸ் பாஸ் வழங்காததாலும், பஸ்சில் அனைவர் மத்தியில் டிக்கெட் கேட்டு கண்டக்டர் திட்டுவதால் மாணவர்கள் பள்ளி செல்வதைத் தவிர்க்க துவங்கியுள்ளனர்.
இதனை தவிர்த்திட போக்குவரத்துக்கழக நிர்வாகம், விரைந்து மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கிட வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...