கோவை மாநகராட்சியில் பணி புரியும் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு
மாதமும் சம்பளம் வழங்குவது தாமதமாகி வருகிறது; இவர்களுக்கு நியாயமான சம்பளமும் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை நகரை சுத்தமாக வைத்திருப்பதற்கு, அடிப்படைக்காரணமாக இருப்பது, மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள். மாநகராட்சி சுகாதாரப்பிரிவில், 2,740 நிரந்தர தொழிலாளர்கள், 2,034 ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். 'நம்ம டாய்லெட்', பொதுக்கழிப்பிடங்கள், சமுதாய கழிப்பிடம் மற்றும் மாநகராட்சி பள்ளி கழிப்பிடங்களை பராமரிக்கும் பொறுப்பு, தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தினக்கூலி 403 ரூபாய்!
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, தினக்கூலியாக, 300 ரூபாய், மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, 200 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இத்தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளம் வழங்குவது தாமதமாகி வருகிறது. மாநகராட்சி பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்வோருக்கு, மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.
இதுதொடர்பாக ஒப்பந்த நிறுவனத்தினரிடமும், மாநகராட்சி அதிகாரிகளிடமும் பேச்சு நடத்தியும், இதுவரை தொகை வழங்கப்படவில்லை. மாநகராட்சி தரப்பில் நிதி ஒதுக்காததால், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என, ஒப்பந்த நிறுவனத்தினர் பதில் அளிக்கின்றனர். இப்பிரச்னை, தொழிலாளர்கள் மத்தியில் புகைச்சலை கிளப்பி வருகிறது.
ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு, தினக்கூலியாக, 403 ரூபாய் கொடுக்க வேண்டும். குறைந்த தொகையே வழங்கப்படுகிறது. மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எப்., சலுகை கொடுப்பதில்லை. அடையாள அட்டை கூட வழங்கவில்லை என்பது, துப்புரவுப் பணியாளர்களுக்கான தொழிற்சங்க நிர்வாகிகளின் நீண்ட கால புகாராகவுள்ளது.
கூடுதலான தொழிலாளர்கள் பணிபுரிவதாக கணக்கு காட்டும் ஒப்பந்த நிறுவனங்கள், மாநகராட்சி நிர்வாகத்திடம் அதிகமான தொகையை பெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சுகாதார துப்புரவு மற்றும் பொது பணியாளர் சங்க பொதுச்செயலாளர் செல்வம் கூறியதாவது:மாநகராட்சி பள்ளிகள் மற்றும் பொதுக்கழிப்பிடங்கள் பராமரிக்கும் உரிமத்தை, ஒரு தனியார் நிறுவனம் பெற்றுள்ளது. அந்நிறுவனத்தினர், 10 கழிப்பறைக்கு ஒரு ஊழியர் நியமித்துள்ளனர். வடமாநிலத்தை சேர்ந்த அவ்வூழியருக்கு, ஒரு கழிப்பறைக்கு, 10 ரூபாய் வீதம், நாளொன்றுக்கு, 100 ரூபாய் என கணக்கிட்டு, மாதத்துக்கு, 3,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
ஆனால், ஒரு கழிப்பறை சுத்தம் செய்ய, 32 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது, மாநகராட்சி நிர்வாகம். பிளீச்சிங் பவுடர், பினாயில், கையுறை, காலுறை, முக கவசம் கொடுப்பதில்லை. கழிப்பறைகளிலும் வாளி இருப்பதில்லை. கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் மவுனம் சாதிக்கின்றனர். இம்மாநகராட்சியில், 'கமிஷன் சிண்டிகேட்' நடக்கிறது.
துப்புரவு பணிக்கான தொகை வழங்குவதற்கான 'பில்'லில் கையெழுத்திட, ஒப்பந்த நிறுவனங்கள் தரப்பில், ஒவ்வொரு அதிகாரிக்கும் 'கமிஷன்' கொடுப்பதால், துப்புரவு தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் துரோகத்தை தட்டிக் கேட்பதில்லை. அவர்களுக்கு வழங்க வேண்டிய நியாயமான சம்பளத்தை வழங்கவும் முன்வருவதில்லை. இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
நிறுவனமே பொறுப்பு!
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'குப்பை அள்ளும் பணி யில் ஈடுபட்ட தொழிலாளர் விபரத்தை தெரிவித்து, ஒப்பந்த நிறுவனங்கள் தரப்பில் 'பில்' சமர்ப்பித்தால், கணக்குப்பிரிவினர் ஆய்வு செய்து, பணம் வழங்குவர்.மாநகராட்சி தரப்பில் நிலுவை வைத்திருந்தாலும், தொழிலாளர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனமே சம்பளம் வழங்க வேண்டும்; அந்நிறுவனத்தாரே பொறுப்பு' என்றனர்.
ஒவ்வொரு மாதமும், 7ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். ஜூன் மாதத்துக்கான சம்பளத்தை, நேற்று வரை வழங்காததால், கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் தலைமையில், டவுன்ஹால் பிரதான அலுவலகத்தில், ஒப்பந்த தொழிலாளர்கள் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயன் சென்னை சென்றிருந்ததால், துணை கமிஷனர் காந்திமதியை சந்தித்து, கோரிக்கையை முறையிட்டனர். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக, அவர் உறுதியளித்தார். கமிஷனர் கோவை திரும்பியதும், நிதி நிலையை ஆராய்ந்து, உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார் தெரிவித்தார். இதன்பின், அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த பிரச்னை, கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. அரசியல் தலையீடு, அதிகாரிகளின் ஊழல், துப்புரவுப் பணியாளர்களிடையே காணப்படும் ஒற்றுமையின்மை என பல காரணங்களால், அப்பாவித் தொழிலாளர்கள் அநியாயமாக ஏமாற்றப்படுகின்றனர். ஊரைத் துாய்மையாக மாற