ஜி.எஸ்.டி.,யால் மருந்துகள் விலை உயராது உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் உறுதி!!!


 சேவை வரியான, ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்ததால், 80 சதவீத
மருந்துகளின் விலை உயராது,'' என, மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின், தமிழக தலைவர் ஜெயசீலன் கூறினார்.
இந்திய மருத்து உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், தென்னிந்திய மருந்து கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், சென்னை வர்த்தக மையத்தில், நேற்று துவங்கியது. கருத்தரங்கை,
சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இதில், 64 அரங்குகள் அமைக்கப்பட்டு, மருந்து வகைகள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து, விளக்கம்அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத் தின், தமிழக தலைவர் ஜெயசீலன் கூறியதாவது:

ஜி.எஸ்.டி.,வரியால், 80 சதவீத மருந்துகளின் விலை உயராது. ஆனால், அடுத்த ஆண்டில், 10 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போது, தேசிய மருந்து விலை நிர்ணய அமைப் பின் கட்டுப்பாட்டில் வரும், 20 சதவீத உயிர்காக்கும் மருந்துகளின் விலை, 2.3 சதவீதம் உயரும்.

ஆன் லைனில் மருந்துகள் விற்பனை குறித்து, அனைத்து மாநிலங்கள் மற்றும் மருந்து உற்பத்தி யாளர்களிடம் இருந்து, மத்திய அரசுஆலோசனை கேட்டுள்ளது. டாக்டர்கள் சீட்டில் எழுதப்படாத மருந்துகளை, ஆன்லைனில் விற்க அனுமதி வழங்க வேண்டும் என, கருத்து தெரிவித்து உள் ளோம். இதுகுறித்த வழிமுறை கள், ஓரிரு மாதங்களில் வரும். தமிழகத்தில், ஜி.எஸ்.டி., வரியால், ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு, ஓரிரு நாட்களில் சரியாகி விடும், என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...