ஜி.எஸ்.டி-யைக் கண்காணிக்க ஆலோசனை நிறுவனம்!


ஜி.எஸ்.டி-யின் தாக்கத்தை மதிப்பிட ஆலோசனை நிறுவனம் ஒன்றை நிர்ணயிக்க
தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது.
ஜூலை 1ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டது. அமல்படுத்தப்பட்டாலும்கூட, இன்னும் ஜி.எஸ்.டி-யை முறையாகச் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. ஜி.எஸ்.டி. குறித்து மாநிலத்தின் பிரச்னைகளைக் கண்காணித்து அதற்கேற்ப முடிவுகளை எடுக்க அனைத்து மாநில நிதியமைச்சர்களும் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜி.எஸ்.டி-யால் ஏற்படும் தாக்கத்தைக் கண்காணித்து மதிப்பிடத் தனியாக ஒரு ஆலோசனை நிறுவனத்தை நிர்ணயிக்க தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. தெலங்கானா நிதியமைச்சர் ராஜேந்தர் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 6ஆம் தேதி வெளியிடப்பட்ட தெலங்கானா அரசின் அறிக்கையில், “ஆலோசனை நிறுவனத்திடம், ஜி.எஸ்.டி-யின் தாக்கத்தைப் பற்றி ஆய்வு செய்து, அதுதொடர்பான விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க நாங்கள் அறிவுறுத்துவோம். அறிக்கையை ஆய்வு செய்த பின் ஜி.எஸ்.டி. குறித்த நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...