பேஸ்புக் நிறுவனம் அப்ளிகேஷன் மூலம் பயனர்களின் ஒவ்வொரு செய்கைகளையும்
கவனித்து வருகிறது. அதன்படி ஒரு ஆன்லைனில் பிரவுஸிங் செய்யும் போது பேஸ்புக் ஆன்லைனில் இருந்தால் பேஸ்புக் லைக் பட்டன் பிற வெப்சைட்களில் தோன்றும். ஆனால் ஆஃப்லைனில் இருக்கும் போதும் இதுபோன்ற லைக் பட்டன்கள் தோன்றுவது பயனரின் தகவல் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. அதனால் பயனர்கள் பலரும் அவர்களில் பிரைவஸியை இழப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
ஒருபயனர் அருகில் நடைபெறும் நிகழ்வுகளை அவ்வப்போது பேஸ்புக் அப்டேட் செய்து வருகிறது. அப்போது அவர்கள் நினைவுடன் இந்த செயலானது நடைபெறுகிறது. ஆனால் ஆஃப் லைனில் இருக்கும் ஒரு பயனரின் நடவடிக்கை கண்காணிக்கப்படுவது மோசமான செயல். பேஸ்புக் நிறுவனத்தின் இந்தச் செயலால் பிரவுசிங் ஹிஸ்டரிகள் வெளியாக வாய்ப்புள்ளது. பேஸ்புக் பிரைவஸி பாலிஸிக்கு இவை எதிரானது என்று கூறி கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில் அந்நிறுவனத்தின் மீது பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதனை விசாரணை செய்த நீதிபதி விரைவில் இதற்கான பதிலை பேஸ்புக் நிறுவனம் வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதற்குப் பதிலளிக்க தவறினால் பேஸ்புக் நிறுவனம் கலிபோர்னியாவில் தடைசெய்யப்படும் நிலை உள்ளது.