GST-யால் வங்கி வாடிக்கையாளர்கள் இரட்டிப்பு பாதிப்படைந்துள்ளதாக வங்கி ஊழியர்கள் சம்மேளனம் குற்றம்சாட்டியுள்ளது. ஏற்கனவே 15 சதவீதமாக இருந்த சேவை வரி, GST-யில் 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படவார்கள் என வங்கி ஊழியர்கள் கூறியுள்ளனர். மத்திய அரசின் இது போன்ற நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் தொடரும் என குறிப்பிட்டுள்ள இந்திய வங்கி
ஊழியர்கள் சம்மேளனம், சேவை வரி உயர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
ஏற்கனவே 12 பெருநிறுவனங்களிடம் 3 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் உள்ளது. அதனை முழுமையாக வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த சம்மேளனம் கேட்டுக் கொண்டுள்ளது. GST என்ற பெயரில் வாடிக்கையாளர்களை நசுக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து ஆகஸ்ட் 22-ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெற உள்ளதாகவும், இதில் 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.