தற்போதைய அரசு பெரும்பான்மையை நிரூபிக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும் என அவர் கூறியுள்ளார். தற்போதைய அரசியல் சூழலில் எம்.எல்.ஏ.க்களை விலை பேச
வாய்ப்புள்ளது என புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய மு.க.ஸ்டாலின் கடிதம் மீதம் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், 19 எம்எல்ஏக்கள் ஆளுநருக்கு அளித்த கடிதம் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுதாரர் கூறியுள்ளார்.