உள்துறை செயலர் நேரில் ஆஜராக உத்தரவு!


தமிழகச் சிறைகளில் மனித உரிமை மீறல் குறித்து ஆய்வு செய்ய அலுவல் சாரா உறுப்பினர்களை
நியமிக்கக் கோரிய வழக்கில் ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்துறை செயலர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மக்கள் கண்காணிப்பகம் சார்பில் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிறைத்துறை விதிகளின்படியும், நீதிமன்றங்களின் தீர்ப்புகளின்படியும் சிறைகளைக் கண்காணிப்பதற்கு அலுவல் சாரா உறுப்பினர்களை அரசு நியமிக்க வேண்டும். அவர்கள், சிறைக்குள் இருக்கும் கைதிகள் நிலை பற்றியும், சிறையில் குடிநீர், உணவு, உடை சுகாதார சூழ்நிலை போன்றவற்றையும் ஆய்வு செய்ய வேண்டும். இதனால், கைதிகளின் மனித உரிமை பாதுகாக்கப்படும்.

அதுபோன்று, சிறைகளில் கடந்த 2014ஆம் ஆண்டு 69 கைதிகள் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு கோவை, மதுரையில் 12 கைதிகளும், புழல் சிறையில் 11 கைதிகளும் இறந்துள்ளனர். சிறைகளில் அலுவல் சாரா உறுப்பினர்கள் ஆய்வு நடைபெற்றிருந்தால், கைதிகளின் இறப்பைத் தடுத்திருக்க முடியும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், உள்துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 1) மீண்டும் இந்த வழக்கு விசாரணையின்போது, உள்துறை துணைச் செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள், உள்துறை செயலரைப் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நிலையில், உள்துறை துணைச் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்திருப்பது நீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகும். அதனால், ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்துறை செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...