தமிழக அரசின் வருவாயை உயர்த்தி அரசு ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் என தகவல் !!

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் என தகவல்

இன்று காலை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை சுமார் 20% உயர்த்த தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன. மேலும் 7வது ஊதியக்குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


7-வது ஊதியக்குழு வழங்கியுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், அரசு ஊழியர்களுக்கு 20% வரை ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று காலை தமிழக தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.

 இந்தக் கூட்டத்தில் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

 ஏற்கனவே, ஏழாவது ஊதியக்குழு குறித்து ஆராய்வதற்காக, தமிழக அரசின் நிதித்துறை செயலாளரான சண்முகம் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்தக்குழு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது தரப்பு அறிக்கையை முதல்வரின் முன்பாக சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரசு ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு வழங்குவதற்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது.

 ஏற்கனவே, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரியும், ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றக்கோரியும் தமிழக அரசு ஊழியர்களும், பள்ளி ஆசிரியர்களும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், நிதித்துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரையில் 20% ஊதிய உயர்வு வழங்கலாம் என்ற பரிந்துரையும் வழங்கப்பட்டது.

 இதுகுறித்து தமிழக அரசு தரப்பிலான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடப்பட உள்ளது. மேலும், எந்தெந்த படிநிலைகளின் அடிப்படையில் ஊதிய உயர்வு   அளிக்கப்படும் என்ற அறிவிப்புகளும் அதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...