நீதிபதிக்கு இண்டர்வியூ லெட்டர்!!!

உயர் நீதிமன்ற நீதிபதிக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள சில தனியார்
நிறுவனங்கள் கடிதம் அனுப்பியது தொடர்பாக 13ம் தேதிக்குள், தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பூர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் ரெக்ரூட்மென்ட், திருச்சி ஏர்டெக் சொலூஷன்ஸ், திருப்பூர் வால்வோ இண்டஸ்ட்ரியல் ரெக்ரூட்மென்ட், கோவை டைமண்ட் இண்டஸ்ட்ரியல் ரெக்ரூட்மென்ட் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணிகளில் சேர நேர்முகத் தேர்வுக்கு கலந்து கொள்ள வருமாறு உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் வீட்டு முகவரிக்குக் கடிதம் வந்துள்ளது.

அந்தக் கடிதத்தில் “மேற்பார்வையாளர் பதவிக்கு மாதம் ரூ.26,500 சம்பளம் தரப்படும். இதற்கான நேர்முகத் தேர்வு அக்டோபர் 1 முதல்3 வரை நடைபெறும். பதிவு கட்டணமாக ஒவ்வொருவரும் ரூ.300 மற்றும் பணிக்கேற்ப ரூ.320, ரூ.350 செலுத்த வேண்டும்” என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த நீதிபதி இந்தச் சம்பவத்தை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கவனத்துக்கு கொண்டு சென்றார். பின்னர் இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.

இவ்வழக்கு நேற்று (அக்டோபர் 1) நீதிபதிகள் கிருபாகரன், வைத்தியநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தனியார் நிறுவனங்களில் இருந்து நீதிபதிக்கு நேர்காணல் அழைப்புக் கடிதம் வந்தது ஆச்சரியமாக உள்ளது. அக்கடிதம் ஒன்றில் இருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டபோது, அது அந்த நிறுவனத்துக்கான முகவரி இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் இது ஒரு மாணவரின் தொலைபேசி எண் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மாணவரிடம் இதுகுறித்து கேட்டபோது தனக்கும் ஒரு கடிதம் வந்தது என்றும், அதில் மத்திய, மாநில அரசுகளின் இலட்சினையுடன், ராஜீவ் விகாஸ் யோஜ்னா திட்டத்தின் கீழ் ரூ. 26,500 மாத சம்பளத்திற்கு எழுத்தர் பணிக்கான ஆணைய கடிதம் வந்ததாக அந்த மாணவர் தெரிவித்துள்ளார். .

எனவே இவை அனைத்தும் போலி நிறுவனங்கள் என்று உறுதி செய்யப்பட்டது. இதுபோன்று அப்பாவி இளைஞர்களிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, போலி நேர்முகத் தேர்வு நடத்தி, பணம் வசூலிக்கும் மோசடி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர் எத்தனைப் பேருக்கு இதுபோன்று கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது? எத்தனைப் பேரிடம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளர், உள்துறை செயலாளர், சென்னை, கோவை மற்றும் திருச்சி மாநகர காவல் ஆணையர்கள், திருப்பூர் காவல் கண்காணிப்பாளர்,ஆகியோர் விசாரணை நடத்தி வரும் 13 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் அண்ணா நகர் துணை ஆணையர் தலைமையில் முதற் கட்ட விசாரணை இன்று (அக் 2) தொடங்கியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...