ரிலையன்ஸ் - ஏர்செல் இணைவு ரத்து!!!

ஏர்செல் நெட்வொர்க்குடன் இணையும் திட்டத்தைக் கைவிடுவதாக
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி நெட்வொர்க் நிறுவனங்களான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் இணைய முடிவுசெய்யப்பட்டு 2016ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்திலிருந்தே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவந்தது. நெட்வொர்க் துறையில் புதிதாகக் களமிறங்கிய ரிலையன்ஸ் ஜியோவால் வருவாய் மற்றும் வாடிக்கையாளர்களை இழந்துவருவதால் ஏர்செல் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனங்கள் இணைவதாகக் கூறப்பட்டது. இந்த இணைப்பின் மூலம், 19 கோடி வாடிக்கையாளர்களுடன் உருவாகும் புதிய நெட்வொர்க் நிறுவனமானது ஏர்டெல் மற்றும் வோடஃபோனைத் தொடர்ந்து இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக உருவெடுத்திருக்கும். இந்நிலையில், அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தனது இணைவுத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளது.

முன்னதாக ஏர்செல் நிறுவனத்துடன் இணைந்தால் ரிலையன்ஸுக்கு உள்ள ரூ.42,000 கோடி கடனில் ரூ.20,000 வரையில் குறைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், ரிலையன்ஸ் தற்போது பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் ஏர்செல்லுடன் இணையும் திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்துள்ளது. தொலைத் தொடர்புத் துறையில் போட்டிகள் வலுத்துள்ளதாலும், பல்வேறு கொள்கை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாலும் இணைவுத் திட்டத்தைக் கைவிடுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...