உதவித்தொகை குறைப்பு :1.4 லட்சம் மாணவர்கள் பாதிப்பு!

தமிழக அரசு கல்வி உதவித்தொகையைப் பாதியாக
குறைத்துள்ளதால் தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
தலித் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து படிக்க உதவும் வகையில் 2012ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகைத் திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்தார். அதன்படி, மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு 12 லட்சத்து 50,000 ரூபாயும், பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு 85,000 ரூபாயும் வழங்கப்பட்டது. அது தவிர, சட்டக் கல்லூரி தொழில் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு மாணவர்களுக்கும் உதவித்தொகை உயர்த்தப்பட்டது.
இந்த உதவித்தொகை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12 லட்சத்து 50,000 ரூபாயாக இருந்த மருத்துவக் கல்லூரி உதவித் தொகை 4 லட்ச ரூபாயாகவும், 85,000 ரூபாயாக இருந்த பொறியியல் கல்லூரி உதவித்தொகை 70,000 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விரைவில் செமஸ்டர் தேர்வு நடக்கவுள்ளதால், மாணவர்கள் அதற்கான ஹால் டிக்கெட்டை வாங்க வேண்டும். அதைப் பெற மாணவர்கள் கல்விக் கட்டணத்தை முழுமையாகச் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், தற்போது 1 லட்சத்து 40,000 மாணவர்கள் கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் உள்ளனர். அவர்களுக்கு செமஸ்டர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கப்படாது என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாணவர்கள் தரப்பில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகம் ஆகியவற்றில் மனு கொடுத்துள்ளனர். எனினும்,அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...