மருத்துவ இடங்களை முடக்கி வைக்கும்
மாணவர்களுக்கு ரூபாய் 2 லட்சம் அபராதமும், கவுன்சிலில் பங்கேற்கத் தடையும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது.
மருத்துவ இடங்கள் தற்போது ‘நீட்’ தேர்வின் அடிப்படையில் நிரப்பப்பட்டுவருகின்றன. இளங்கலை மருத்துவப் படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகியவற்றைப் பொறுத்தவரை, மாநில அரசு மருத்துவக் கல்லூரி இடங்களுக்கும், தனியார் கல்லூரி இடங்களுக்கும் அந்தந்த மாநில அரசுகளே சேர்க்கையை நடத்துகின்றன.
மத்திய அரசு, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும், நிகர்நிலைக் கல்லூரி இடங்களுக்குமான சேர்க்கையை நடத்துகிறது. தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனங்களான எய்ம்ஸ், ஜிப்மர் ஆகியவை சொந்த கவுன்சிலிங் நடைமுறையைப் பின்பற்றுகின்றன.
இப்படி தனித்தனியாக மருத்துவ சேர்க்கை முறை பின்பற்றப்படுவதால், தரவரிசைப் பட்டியலில் முன்னனியில் இருக்கும் மாணவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நிகர்நிலைக் கல்லூரிகளில் மருத்துவ இடங்களைத் தேர்வு செய்து முடக்கி வைத்துவிடுகிறார்கள். இதனால், மீதமுள்ள மாணவர்களுக்கு அந்த இடங்கள் கிடைக்காமல் போகின்றன. பின்னர், முன்னணியில் இருக்கும் மாணவர்கள் சிறந்த அரசு கல்லூரியில் கிடைத்த இடத்தை வைத்துக்கொண்டு, மற்ற இடங்களை விட்டுச் செல்கிறார்கள். அவர்கள் விட்டுச் செல்லும் காலியிடங்கள் பல சுற்றுகளுக்கு பிறகே நிரப்பப்படுகின்றன.
இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில், மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. மத்திய அரசு சேர்க்கை நடத்தும் மருத்துவ மற்றும் பல் மருத்துவ இடங்களுக்குப் பதிவுக் கட்டணம் செலுத்தும் திட்டத்தை இந்திய மருத்துவக் கவுன்சிலின் ஒப்புதலுடன் மத்திய சுகாதார அமைச்சகம் வகுத்துள்ளது. தனியார் மற்றும் நிகர்நிலைக் கல்லூரி இடங்களுக்கு இந்தப் பதிவு கட்டணம் ரூபாய் 2 லட்சமாகவும், அரசு இடங்களுக்கு ரூபாய் 25 ஆயிரமாகவும் இருக்கும் என்று சுகாதார அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தனக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ இடத்தை ஏற்றுக்கொள்ளும் மாணவருக்குக் கல்விக் கட்டணத்தில் பதிவுக் கட்டணம் கழித்துக்கொள்ளப்படும். ஒருவேளை, அவர் வேறு கல்லூரிகளில் தேர்வு செய்த இடத்தை ஏற்றுக்கொண்டு, இந்த இடத்தை நிராகரித்துவிட்டால், அவருக்கு அபராதமாக இந்தப் பதிவு கட்டணம் திருப்பித்தர மாட்டாது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய மாணவர்கள் ரூபாய் 2 லட்சம் வரை இழக்க வேண்டி இருக்கும். மேலும், மேற்கொண்டு அவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்கத் தடை விதிக்கப்படும். இந்தத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், அடுத்த ஆண்டில் இருந்து இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒருங்கிணைந்த கவுன்சிலிங் முறையில் சேர்க்கை நடத்தினால்தான், மருத்துவ இடங்களை முடக்கும் பிரச்சினையைத் தீர்க்க முடியும். மேலும், மத்திய, மாநில அரசு இடங்களை நிரப்பிய பிறகுதான், நிகர்நிலைக் கல்லூரி இடங்களுக்கு கவுன்சிலிங்கைத் தொடங்கும் யோசனையையும் முன்வைத்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.
இந்திய மருத்துவக் கவுன்சிலின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் மேற்பார்வைக் குழு இந்த யோசனையைப் பரிசீலித்துவருகிறது. அபராதம் விதிக்கும் யோசனைக்கு மாணவர்களும் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று கருதப்படுகிறது.