பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கோரிய முதல்வர்!

அமராவதி: தன்னால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலின் காரணமாக
மக்களுக்கு ஏற்பட்ட இன்னலுக்கு ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மன்னிப்பு கோரியது வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சங்கராந்தி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் அமராவதி நகருக்கு புறப்பட்டுள்ளார். அப்போது அங்கு, முதல்வரின் பயணத்தால், 2 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டதால் கடும் அவதிக்குள்ளான ஒரு சாமானியர், காவல்துறையினரிடம் கண்டனக்குரல் எழுப்பியுள்ளார்.

அப்போது அவ்வழியாகச் சென்ற முதல்வர் சந்திரபாபு நாயுடு இதுகுறித்து அறிந்தார். உடனே அந்த நபரிடம் சந்திரபாபு நாயுடு மன்னிப்புக் கோரினார். பொதுமக்கள் முன்னிலையிலேயே அவரிடம் முதல்வர் சந்திரபாபு நாயுடு மன்னிப்புக் கேட்டார். பொதுமக்கள் முன்னிலையில் தன்னால் ஏற்பட்ட அசௌகரியத்துக்கு மாநில முதல்வரே மன்னிப்பு கோரியது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...