TNPSC : 3,235 அரசு பணியிடங்களை நிரப்ப 23 வகை தேர்வுகள் நடத்த திட்டம்!!!

'தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 3,235 இடங்களை நிரப்ப,
இந்த ஆண்டு, 23 வகை தேர்வுகள் புதிதாக நடத்தப்படும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி.,யின் சார்பில், ஆண்டுதோறும், தேர்வு திட்டமிடல் அறிக்கை வெளியிடப்படும். 2017ல், 12 ஆயிரம் இடங்களுக்காக, 24 வகை தேர்வுகள் அறிவிக்கப்பட்டு, 18 தேர்வுகள் நடத்தப்பட்டு உள்ளன. மீதமுள்ள, ஆறு தேர்வுகள் இந்த ஆண்டு நடத்தப்பட உள்ளன.இந்நிலையில், புதிய ஆண்டில் நடத்தப்படும் தேர்வு விபரம் அடங்கிய திட்டமிடல் அறிக்கையை, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார் அறிவித்தார்.

இதன்படி, 3,235 காலி இடங்களை நிரப்ப, 23 தேர்வு கள் புதிதாக நடத்தப்பட உள்ளன. அதிகபட்சமாக, 'குரூப் - 2' நேர்முக தேர்வு உள்ள பதவிக்கு, 1,547 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...