ரயில்வே பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவே, தேர்வு கட்டணம்
உயர்த்தப்பட்டதாக, ரயில்வேத் துறை அமைச்சர், பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ரயில்வேத் துறையில் குரூப் சி மற்றும் குரூப் சி ஒன்றாம் நிலை பிரிவுகளில் பிட்டர், கிரேன் டிரைவர், தச்சர் உள்ளிட்ட 89,409 பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிக்கப்பட்டது. விலக்கு அளிக்கப்பட்ட பிரிவினருக்கு 250 ரூபாயும், பொது பிரிவினருக்கு 500 ரூபாயும் தேர்வு கட்டணமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தேர்வு கட்டணம் குறித்து ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று முன் தினம் (பிப்ரவரி 21) விளக்கமளித்துள்ளார்
ரயில்வேத் துறை அமைச்சர், பியுஷ் கோயல் “உண்மையாக வேலை தேடும் இளைஞர்கள் மட்டுமே ரயில்வேத் தேர்வில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதால், ரயில்வே தேர்வை எழுத விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களில் பெரும்பாலானோர் தேர்வு எழுதுவதில்லை. இதனால், தேர்வுக்காக அரசு நிறைய பணம் செலவழிக்கிறது. மேலும், நேரமும் விரயமாகிறது. இதைத் தடுக்க, தேர்வு எழுதுவதற்கான கட்டணம், கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு வரை பொது பிரிவினருக்கு 100 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது 500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலக்கு அளிக்கப்பட்ட பிரிவினருக்கு 250 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, பணியாளர் தேர்வு எழுதுபவர்களுக்கு அவர்கள் செலுத்திய தேர்வு கட்டணம் திரும்ப கிடைக்கும். 250 ரூபாய் கட்டணம் செலுத்தியவர்களுக்கு முழு தொகையும் திரும்பத் தரப்படும். 500 ரூபாய் கட்டணம் செலுத்தியவர்களுக்கு 400 ரூபாய் திரும்ப தரப்படும். அதே போல், ஆன்லைன் மூலமாக, தமிழ், இங்கிலிஷ், மலையாளம், தெலுங்கு, இந்தி, உருது, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடா, கொங்கனி,மணிபூரி, மராத்தி, ஒடியா, பஞ்சாப், ஆகிய மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு மைய வருகைப் பதிவில், விண்ணப்பதாரர்கள், தேர்வு எழுதும் மொழியிலேயே கையெழுத்திடலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 18ஆம் தேதி, பீகார் மற்றும் கேரளாவை சேர்ந்த சில விண்ணப்பதாரர்கள் வயது வரம்பைத் தளர்த்த வேண்டும் எனப் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து, அனைத்துப் பிரிவினருக்குமான வயது வரம்வு 2 ஆண்டுகள் கூடுதலாக தளர்வு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை ரயில்வே தேர்வில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.