வழிகாட்டும் வசதியுடன் புதிய ஹெல்மட்
ஒன்றினை கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
உலகின் பல்வேறு நிறுவனங்களும் அவ்வப்போது புதிய தொழில்நுட்ப வசதிகள் கொண்ட கருவிகளை வெளியிட்டுப் பயனர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. கர்நாடகாவைச் சேர்ந்த யோகேஷ், அபிஜீத் என்ற இரண்டு பொறியியல் மாணவர்கள் புதுமையான ஹெல்மட் ஒன்றினை வடிவமைத்துள்ளனர். ஸ்மார்ட் போன்களில் உள்ள ப்ளுடூத் வசதியைப் பயன்படுத்திப் பயனர்களுக்குப் பயணத்தின்போது வழிகாட்டும் வகையில் ஹெல்மட்டினை இவர்கள் வடிவமைத்துள்ளனர்.
இந்த ஹெல்மட் அதனுள் ஸ்பீக்கர் வசதியைக் கொண்டுள்ளது. பயனர்கள் அதனை அணிந்து செல்லும்பொழுது அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கான பாதையை இது தெரிவிக்கும். இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும்போது எதிரே வரும் வாகனங்களின் விளக்குகள் கண்களில் பட்டுக் கண்கள் கூசாமல் இருக்க இதில் சிறப்பு கிளாஸ்களைப் பொருத்தியுள்ளனர். ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 6 மணிநேரம் செயல்படும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஹெல்மட்டில் இத்தகைய வசதியை இவர்கள் அறிமுகம் செய்துள்ளது பல தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த ஹெல்மட்டின் விலை ரூ.1500 எனவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.