மத்திய அரசின் காவல் துறையில் காலியாக உள்ள துணை ஆய்வாளர், உதவி துணை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்குப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 1,330
பணியின் தன்மை: Sub-Inspector (Male) in Delhi Police - 97 Posts (Open - 86, Ex-Ser - 11)
Sub-Inspector in Delhi Police/ Female - 53 Posts (Open - 53)
Sub-Inspector (GD) in CAPFs - 1180 Posts (Open - 1073), (Ex-Ser - 107)
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100, மற்ற பிரிவினருக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடைசித் தேதி: 02.04.2018
மேலும் முழுமையான விவரங்களுக்கு http://ssc.nic.in/SSCWEBSITELATEST/notice/noticepdf/noticesicpo201803032018.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.