சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட்
நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை நாடு முழுவதும் கட்டாயமாக்கி 2016ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதாடி நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு பெற்றது
. 2017ம் ஆண்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரிய வழக்கில், தமிழகத்துக்கு விலக்கு தர முடியாது என மத்திய அரசு வாதிட்டதால், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து உச்ச நீதிமன்றம் விலக்கு அளிக்கவில்ைல. எனினும் தமிழகத்தில் 88,000 மாணவர்கள் கடந்த ஆண்டு மே 7ம் தேதி நீட் தேர்வு எழுதினர்.
இந்த ஆண்டு 15 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஆண்டு மே 6ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9ம் தேதி (நாளை) கடைசி நாளாகும்.
நாளை இரவு 11.30 மணி வரையிலும் www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம், மார்ச் 10ம் தேதி (நாளை மறுநாள்) இரவு 11.30 வரை மாணவர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம்.
கடைசி நேரத்தில் விண்ணப்பிப்பதை தவிர்க்கவும்: நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கடந்த மாதம் 8ம் தேதி சிபிஎஸ்இ அறிவித்தது.
அந்த அறிவிப்பு வெளியானவுடன் நாடு முழுவதும் ஏராளமானோர் ஆர்வத்துடன் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக குறிப்பிட்ட இணையதளத்தை பார்க்க முயன்றனர், அதனால் அந்த இணையதளம் முடங்கியது. அதே போல் கடைசி நேரத்தில் இணையதளம் முடங்க வாய்ப்புள்ளதால் கடைசி நேரத்தில் விண்ணப்பிப்பதை தவிர்க்கவும்.
ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கும் நீட் கட்டாயம்?: ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கும் (ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம், ஓமியோபதி) நீட் தேர்வு கட்டாயம் என்று கடந்த மாதம் 12ம் தேதி சுற்றறிக்கை ஒன்றை ஆயுஷ் அமைச்சகம், தமிழக இந்திய முறை மற்றும் ஓமியோபதி இயக்ககத்துக்கு அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக இந்தியமுறை மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்கக மூத்த அதிகாரியை தொடர்புகொண்டபோது, ‘‘தமிழக அரசின் நிலைப்பாட்டின்படி, ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு தேவையில்லை என்று ஆயுஷ் அமைச்சகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
ஆனால் அங்கிருந்து இதுவரை நீட் தேர்வில் இருந்து விலக்களிப்பதாகவோ, நீட் தேர்வு கட்டாயம் என்றோ எந்த பதிலும் வரவில்லை’’ என்றார்.