தமிழகத்தில் மார்ச் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள காவலர் எழுத்துத் தேர்வில்
முறைகேட்டை தடுப்பதற்காக விடைத் தாளில், இம்முறை ' பார்கோடு' பயன்படுத்தப்படுகிறது.
தமிழக காவல் துறையில் ஆயுதப் படையில் காலியாக உள்ள 5,538 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கும், சிறைத் துறையில் காலியாக உள்ள 340 இரண்டாம் நிலை சிறைக் காவலர் பணியிடங்களுக்கும், தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 216 தீயணைப்போர் பணியிடங்களுக்கும், 46 பின்னடைவு பணியிடங்களுக்கும் ஆக மொத்தம் 6,140 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்போவதாக கடந்த டிசம்பர் மாதம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்தது.
இந்தத் தேர்வுக்கு மாநிலம் முழுவதும் இருந்து 3.20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில்10 சதவீதம் பேர் பெண்கள். இத்தேர்வில் 19 திருநங்கைகளும் பங்கேற்கின்றனர். இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு மார்ச் 11-ஆம் தேதி மாநிலம் முழுவதும் 232 தேர்வு மையங்களில் நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
பார்கோடு அறிமுகம்:
இத்தேர்வில் முறைகேட்டை தடுப்பதற்காக சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முக்கியமாக தேர்வுக் கூட மையத்தில் யாரும் முறைகேட்டில் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக, தொழில்நுட்ப ரீதியாகவும் சில நடவடிக்கைகளை சீருடை பணியாளர் தேர்வு குழுமம் எடுத்துள்ளது.
முக்கியமாக, இந்தத் தேர்வில் பதிவு எண், வரிசை எண் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக பார்கோடு இம்முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.