ஆன்ட்ராய்டு பயனர்களுக்காக கூகுள் லென்ஸ்!!!

ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு பயன்படும்
வகையில் கூகுள் நிறுவனம் கூகுள் லென்ஸ் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தை பல்வேறு நபர்கள் பயன்படுத்தி வரும் நிலையில், அதில் அவ்வாவ்போது புதுமையான அப்டேட்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதிலும் சமீபத்தில் வெளியிட்ட தகவலில் கூகுள் லென்ஸ் என்ற வசதியைச் சோதனை செய்து வருவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்திருந்தது.

கூகுள் லென்ஸ் என்ற வசதியின் மூலம் பயனர்கள் எடுக்கும் புகைப்படத்தில் உள்ள எழுத்துக்களை கண்டறிவது மட்டுமின்றி, ஒரு புகைப்படத்தில் உள்ள அனைத்து பொருட்களின் தகவல்களையும் தெரிவிக்க ஏதுவாக இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியானது பயனர்களை பெருமளவில் ஈர்த்துள்ளது. கூகுள் போட்டோஸ் என்ற செயலியில் கூகுள் லென்ஸ் வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கான சோதனை ஓட்டங்கள் முதலில் நடத்தப்பட்டு அதன் வெற்றிக்கு பின்னரே தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.



இந்த கூகுள் லென்ஸ் வசதியானது இதற்கு முன்னர் கூகுள் நிறுவனத்தின் பிக்ஸல் மாடல்களில் மட்டும் வெளியாகி இருந்த நிலையில், தற்போது ஆன்ட்ராய்டு பயனர்கள் அனைவருக்கும் வெளியாகி உள்ளது. ஆனால் ஐ.ஓ.எஸ் பயனர்களுக்கான வெளியீடு குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...