குழந்தைகளுக்கு ஞாபக சக்தி வளர....

பரீட்சை சமயத்தில் எல்லாக் குழந்தைகளுக்கும் உள்ள பெரிய பிரச்சினை,
எத்தனை முறை படித்திருந்தாலும் மனதில் பதியாமல் மறந்துவிடும். இந்தக் குறை நீங்க அரிசி, திப்பிலியை லேசாக வறுத்து, நைஸாக அரைத்து வெறும் வயிற்றில் தேனில் மூன்று சிட்டிகை கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி ஏற்படும்.

பட்டு பாதங்களின் பாதுகாப்பு

வெய்யில் காலத்தில் குளிர்ந்த தண்ணீரில் உப்பைக் கலந்து அதில் பாதங்கள் முழ்கி இருக்கும்படி 10 நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும். குளிர் நேரத்தில் பாதம் அதிக குளிர்ச்சியாக உணர்ந்தால், இரவில் நல்லெண்ணெய் தேய்த்து விட்டு தூங்க வேண்டும். காலில் ஏற்படும் பித்த வெடிப்புகளுக்கு இரவு படுக்கப்போகும் போது இலுப்பை எண்ணெய் அல்லது வேப்ப எண்ணெய் தடவினால் பித்த வெடிப்புகள் குணமாகும்.

எண்ணெய் பட்டு கொப்பளம் ஆகாமலிருக்க...

சமையல் செய்யும் போது கொதிக்கும் எண்ணெய் உடலில் பட்டு விட்டால் உடனே அந்த இடத்தில் தேனை அல்லது கல்லுப்பு சிறிது தடவினால் கொப்புளம் ஏற்படாது.

கால் ஆணி நீங்க ...

இஞ்சிச் சாற்றுடன் சிறிதளவு நீர்த்த சுண்ணாம்பைக் கலந்து கால் ஆணிக்கு மருந்தாக போட்டு வந்தால் கால் ஆணி நீங்கி விடும்.

5 கிராம் மஞ்சள், 5 கிராம் வசம்பு, கைப்பிடி அளவு மருதாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கால் ஆணி உள்ள இடத்தில் அடைபோல் கனமாக வைத்து மேலே ஒரு வெற்றிலையை வைத்து, துணியினால் இறுகக் கட்டி விட வேண்டும். படுக்கும் முன்பு இதை செய்ய வேண்டும். தொடர்ந்து அரை மண்டலம் (20 நாட்கள்) வரை இவ்விதம் செய்தால் கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

உடல் சூட்டை தணிக்க...

சிறிது தண்ணீரில் சந்தனத்தை நன்றாக குழைத்து தடவினால் உடல் சூடு தணியும். மருதாணியை அரைத்து உள்ளங்கை,
கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து சுட வைத்துஅதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து வீக்கம், வலி உள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டு வீக்கம், மூட்டு வலி குறையும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...