அலுவலகத்தில் இல்லாத அதிகாரிகள், 'சஸ்பெண்ட்!!!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பணி நேரத்தில் அலுவலகத்தில் இல்லாத, 18க்கும் மேற்பட்ட
அரசு அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், கவர்னர் ஆட்சி நடக்கிறது.

இந்த மாநிலத்தின், டோடா மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில், மாவட்ட மேம்பாட்டு பணிகள் துறை கமிஷனர், பவானி ரக்வால், நேற்று முன்தினம் ஆய்வு நடத்தினார்.

அப்போது, பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், பணி நேரத்தில் அலுவலகத்தில் இல்லை.இதையடுத்து, நேற்று, 18க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளை, 'சஸ்பெண்ட்' செய்து, கமிஷனர், பவானி ரக்வால் உத்தரவிட்டார்.

 இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தும்படியும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட அதிகாரிகளின் சம்பளத்தை நிறுத்தி வைக்கும்படியும், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த மாத இறுதிக்குள், டோடா மாவட்டத்தில் உள்ள, அனைத்து அரசு அலுவலகங்களிலும், 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு முறையை கடைபிடிக்க வேண்டும் என்றும், அவர் உத்தரவிட்டார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...