நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள்

தினசரி கொதிக்கவைத்து ஆறவைத்த குடிநீரைப்
பருகுவது நல்லது. சராசரியாக இரண்டு, மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஒரே மாதிரியான உணவு உண்பதைத் தவிர்த்துவிட்டு, அனைத்துவிதமான உணவுகளையும் தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அனைத்து விதமான சத்துக்களும் கிடைக்கும்.

வானவில் வண்ணக் காய்கறிகள், பழங்களை தினம் ஒரு வண்ணம் என உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

சராசரியாக ஒரு நாளைக்கு ஆணுக்கு 60 மி.கி, பெண்ணுக்கு 50 மி.கி புரதச்சத்து அவசியம். பருப்பு மற்றும் பயறு வகைகளில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. மாமிச உணவுகளைக் காட்டிலும், மிகவும் அதிகமாக சோயாபீன்ஸில் புரதம் உள்ளது.

சோயா, கறுப்பு உளுந்து, கொள்ளு, பச்சைப் பயறு, பட்டாணி, ராஜ்மா, கடலைப் பருப்பு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் உட்கொள்ள வேண்டும்.

மாவுச்சத்தும் அவசியம். மைதா போன்ற சத்துஇல்லாத, அதிக அளவில் பக்குவப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

சிறுதானியங்கள், தீட்டப்படாத அரிசி மற்றும் முழுக்கோதுமை போன்ற தானியங்கள் மிகச்சிறந்தவை.

கொழுப்புச்சத்து மிகவும் அவசியம். கொழுப்பை முற்றிலுமாகத் தவிர்ப்பது தவறு. குறைந்தது 10 - 20 சதவிகிதக் கொழுப்புச்சத்து அவசியம். இதற்கு, நாம் தினசரி பயன்படுத்தும் கடலை எண்ணெயும் நல்லெண்ணெயுமே போதுமானவை. ஒருவருக்கு, ஒரு நாளைக்கு, நான்கு டீஸ்பூன் எண்ணெய் போதுமானது.

வேப்பிலைத் தண்ணீர்க் குளியல், வேப்பிலையை அரைத்துப் பூசுவது, மஞ்சளை அரைத்துப் பூசுவது, பயத்தம் பருப்பு மாவு, சீயக்காய் போன்றவற்றைப் பயன்படுத்துவது நல்லது.

மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், ஏலம் போன்றவற்றை தினசரி சேர்த்துவர அவை எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நம்மை நோயில் இருந்து பாதுகாக்கும். மஞ்சள் தூளை வீட்டில் தயாரிப்பது நல்லது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிற்றுண்டிகள்

பருப்பு அடை, காய்கறி தோசை, ராகி அடை, வெண்பொங்கல், சாம்பார், வெந்தயக்களியுடன் கருப்பட்டி, நல்லெண்ணெய்.

மாதம் ஒரு முறை வேப்பம்பூ ரசம்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்குச் சத்துமாவுக் கஞ்சி, இட்லி, சாம்பார், சட்னி. இட்லி மாவுடன் கொத்தமல்லி, கேரட், பீன்ஸ் கலந்துகொள்வது நல்லது.

வாரம் ஒரு முறை சுண்டை வற்றல் குழம்பு (பொரித்த சுண்டை வற்றல்).

முருங்கைக்கீரை சூப், காளான் சூப், காய்கறி சூப்.

பருப்பு, பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்த ரசம். தக்காளி, பூண்டு, மிளகு சேர்த்த ரசம். நெல்லிக்காய்த் துவையல், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை சேர்த்த துவையல்.

தயிர், குடலில் உள்ள நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்களைப் பாதுகாக்கும்.

தேங்காய், பருப்பு, பசுநெய் சேர்த்துச் செய்த பொன்னாங்கண்ணிப் பொரியல்.

வெள்ளைச் சீனி சேர்க்காத தேநீர்.

அசைவ உணவு உண்பவர்கள் குளிர்காலங்களில் நாட்டுக்கோழி சூப் சாப்பிடலாம்.

தவிர்க்க வேண்டியவை...

பேக்கரி உணவுகளான கேக், பன், பிரெட், நூடுல்ஸ், ஜங்க் ஃபுட்ஸ், குளிர்பானங்கள், பாக்கெட்டில் அடைத்த சிப்ஸ்கள், சாக்லேட், மிட்டாய்கள், செயற்கைச் சுவை சேர்க்கப்பட்ட சைவ, அசைவ உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும்.

உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க,  ஊறுகாய், சிப்ஸ், அப்பளம், வற்றல், கருவாடு போன்ற உப்பு அதிகமாக உள்ள பண்டங்களைத் தவிர்க்கவேண்டியது அவசியம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...