தினப் பெட்டகம் – 10 (24.06.2018)
நம் உடல் என்றால் என்ன? எலும்பும் சதையும் திரவங்களும் சேர்ந்த ஒரு பொருள். தசைகள் இல்லாவிட்டால் என்னவாகும்? உடலில் தசைகளே இல்லை. எப்படியிருக்கும்? நினைத்துப் பார்க்கவே முடியவில்லைதானே?! அவ்வளவு முக்கியமான தசைகளைப் பற்றிய தகவல்கள்:
1. உடம்பின் எடையில் 40% தசைகளுடையது.
2. உடலில் மிகவும் வலிமையான தசை எது தெரியுமா? தாடையில் இருக்கும் தசைகள். நாம் வாயில் போட்டு மெல்லுவதற்குப் பயன்படும் தசைகள். 200 பவுண்ட் எடைக்கு ஈடான சக்தி கொண்ட தசை.
3. தசைகள் என்பது தசை நார்கள் என்ற ஒரு வகையான செல்களால் உருவானது. மனித உடம்பில் உருவாகும் மொத்தத் தசைகளுக்கும் தேவையான தசை நார்கள் நம் பிறப்பிலேயே இருக்கும். வளர வளர அவை இறுக்கமாகவும் தடிமனாகவும் மாறும்.
4. சிரிக்கும்போது முகத்தில் 17 தசைகள் வேலை செய்கின்றன. ஆனால், கோபத்தில் முகத்தைச் சுளிக்கும்போது, 43 தசைகள் வேலை செய்கின்றனவாம்!
5. இதயம் என்பது cardiac muscleஆல் ஆனது. ஒரு நொடிகூட நிற்காமல் இயங்கும் தசை!
6. நாம் இயக்க முடிந்த தசைகளை skeletal muscles என்று சொல்வோம். அது எலும்புகளோடு ஒட்டி இருக்கும். தசை நாண்கள் மூலமாக எலும்போடு இத்தசைகள் இணைந்திருக்கும்.
7. உடலில் மிகப் பெரிய தசைகள் இடுப்பின் கீழ்ப் பகுதியில் இருக்கின்றன. நாம் நேராக அமர்வதற்கும், பொருட்களைத் தூக்குவதற்கும் தள்ளுவதற்கும் இவைதான் பயன்படுகின்றன.
8. நம் உடலில் 600க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன.
9. நம் உடலில் மிகவும் தீவிரமாக இயங்கும் தசைகள் கண்களை இயக்குபவை. வாசிக்கும்போது, பார்க்கும்போது, தூங்கும்போது என்று மாறுபட்ட செயல்களைச் செய்துகொண்டே இருக்கும். ஒரு மணிநேரம் தொடர்ந்து வாசித்தால், 10,00க்0கும் அதிகமான அசைவுகள் நிக்ழ்ந்திருக்கும் கண்ணில்.
10. நம் உடலில் மிகவும் சிறிய தசை காதில் இருக்கிறது!