இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த 2019க்கு 5 ஆயிரம் கோடி 2024 க்கு 14 ஆயிரம் கோடி: தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்

இந்தியா முழுவதுமுள்ள பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்
நடத்த ரூ.5 ஆயிரம் கோடி செலவாகும் என்றும், மேலும் 2024 ல் தேர்தல் நடத்த ரூ.14 ஆயிரம் கோடி தேவைப்படும் என தேர்தல் ஆணையம்  அறிக்கையில் கூறியுள்ளது.  வரும் 2019ல்  பாராளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. இந்த தேர்தலின் போதே  இந்தியா முழுவதுமுள்ள மாநில சட்டசபைகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. இதற்கான  வேலைகளை முன்னெடுத்து செய்து வந்த நிலையில் இது தொடர்பாக மத்திய சட்ட ஆணையம் கடந்த வாரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து கருத்து கேட்டது.

 இந்த ஆலோசனை மற்றும் கருத்துக்கேட்பு கூட்டத்தில் அனைத்துக்  கட்சிகளையும் அழைத்து  கருத்துக் கேட்ட நிலையில் தேசிய கட்சிகளில் 4 கட்சிகள் மட்டுமே ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன. மற்ற 11 கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் இதுகுறித்து சட்ட ஆணையத்துக்கு தலைமைதேர்தல்ஆணையமும் பதில் அளித்துள்ளது. அதில் பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட என்னென்ன செய்ய வேண்டும், எவ்வளவு செலவாகும் என்பன போன்ற விபரங்கள் விரிவாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

 குறிப்பாக ஓட்டுப்பதிவு நடத்த ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 2 மடங்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தேவைப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி அதிகாரிகள், ஊழியர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க கால அவகாசம் தேவைப்படும். அதற்கும் கணிசமான தொகை செலவாகும். மேலும் கூடுதலாக மின்னணு எந்திரங்கள் வாங்குவதற்கு மட்டும் சுமார் ரூ.5 ஆயிரம் கோடி தேவைப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இவ்வாறு வாங்கும் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை 3 தேர்தலுக்கு மட்டும்தான் பயன்படுத்த முடியும். அதன் பிறகு அதை பயன்படுத்த முடியாத நிலை உண்டாகும்.

புதிய எந்திரங்கள் வாங்க வேண்டும், ஆக 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை எந்திரங்களுக்கே சில ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். மேலும் வரும் ஆண்டுகளில் ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. எனவே மின்னணு எந்திரங்கள் தேவை அதிகரிக்கும். அதற்கும் கூடுதல் செலவாகும் என்று அதில் கூறப்படுள்ளது.குறிப்பாக வரும் 2024-ம் ஆண்டு நடக்க உள்ள தேர்தலின் போது இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து  காணப்படும்  அப்போது  கூடுதலாக 12 லட்சம் ஓட்டுச்சாவடிகள் அமைக்க வேண்டியதிருக்கும். அப்போது மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்கள் வாங்குவதற்கே சுமார் ரூ.14 ஆயிரம் கோடி  தேவைப்படும் என்று சட்ட ஆணையத்திடம் தேர்தல் ஆணையம் அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...