புதுடில்லி : ராஜ்யசபாவில் 22 மொழிகளில் பேச முதன்
முறையாக அனுமதி வழங்கி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.
ராஜ்யசபா மழைக்கால கூட்டத்தொடரில், இந்திய அரசியலமைப்பின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகளில் பேச முதன்முறையாக அனுமதி அளித்து துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார். இதற்காக மொழி பெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் ராஜ்யசபா உறுப்பினர்கள் தங்கள் தாய் மொழியில் பேசும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், அசாமி, பெங்காலி, உருது, மலையாளம், மராத்தி, பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய 12 மொழிகளுக்கு ராஜ்யசபாவில் ஏற்கனவே மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனர். மணிப்பூரி, மராத்தி, நேபாளி, போடோ மற்றும் மைதாலி ஆகிய மொழிகளுக்கு லோக்சபாவிலிருந்து மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 5 மொழிகளுக்கு தகுதியான மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.