மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு ரத்து: தமிழக அரசு உத்தரவு


சென்னை: மருத்துவப் படிப்புக்கான தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு கலந்தாய்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்ட மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநர் மற்றும் தேர்வுக்குழு செயலர் செல்வராஜன், ஜூலை 16,17,18-ம் தேதிகளில் மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற இருந்தது. இந்நிலையில் தமிழில் 'நீட்' தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்கவும், 196 மதிப்பெண்களைச் சேர்த்து புதிய தரவரிசை பட்டியல் தயாரிக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிட்டிருந்தது.

உயர்நீதிமன்ற கிளை உத்தரவையடுத்து நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஜூலை 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெற்ற மருத்துவப் படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வில் 3,882 இடங்கள் நிரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...