ரூ.50,000-த்தை ஒப்படைத்த சிறுவனுக்கு பாராட்டு விழா! ஈரோடு போலிஸார் முடிவு


 மாவட்டம் கனிராவுத்தர்குளம் பகுதியை சேர்ந்தவர் பாட்சா - அப்ரோஜ் பேகம் தம்பதி. இவரின் மகன் யாசின் அருகே உள்ள அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது, சாலையோரத்தில் பை ஒன்று இருப்பதை பார்த்துள்ளான்.அதனை திறந்து பார்த்த போது அதில் நிறைய பணம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தான். அந்த பையை எடுத்து சென்ற யாசின் இதுதொடர்பாக தனது ஆசிரியரிடம் கூறியுள்ளான். அந்த பையை பெற்றுக்கொண்ட ஆசிரியர் அதனை போலீசாரிடம் யாசினை வைத்து கொண்டு ஒப்படைத்தார்.இந்த பணத்தை பெற்றுக்கொண்ட  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் சிறுவனின் நேர்மையை பாராட்டி அவருக்கு வாழத்துகளை கூறினார். யாசினின் குடும்பம் வறுமையில் வாடினாலும், நேர்மையாக செயல்பட்ட சிறுவனுக்கு பாராட்டு விழா நடத்தவும் போலீசார் முடிவு செய்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...