கர்ப்பப் பையில் இருக்கும்போதே குழந்தைகளுக்கு அறுவைச் சிகிச்சை! மருத்துவ உலகின் சாதனை


பிரித்தானியாவில் முதன் முறையாக தாயின் கர்ப்பப் பையில் இருக்கும்போது இரட்டைக் குழந்தைகளுக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை செய்தமையானது மருத்துவ உலகின் புதிய சாதனையாக பார்க்கப்படுகின்றது.

குழந்தைகளின் முள்ளந்தண்டு வடத்தில் காணப்பட்டிருந்த குறைபாட்டினை நீக்குவதற்காகவே இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள யூனிவர்சிட்டி ஹொஸ்பிட்டலை சேர்ந்த சுமார் 30 வைத்தியர்களைக் கொண்ட குழுவே இச் சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

குறித்த வைத்தியர்கள் இந்த ஆபத்தானதும், சிக்கல் தன்மை வாய்ந்துமான சத்திரசிகிச்சையை 90 நிமிடங்களில் வெற்றிகரமாக முடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...