20 தொகுதி தேர்தல் எப்போது? முதல்வர் பதில்!


அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 20 சட்டப் பேரவைத் தொகுதிகளின் பொறுப்பாளர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று (நவம்பர் 3) ஆலோசனை நடத்தினர்.

தமிழகத்தில் காலியாக 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக் குழுப் பொறுப்பாளர்களை கடந்த அக்டோபர் 29ஆம் தேதி அதிமுக தலைமை நியமித்தது. இதில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்பட அனைத்து அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர். மேலும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சியின் அமைப்புச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களும் தேர்தல் பணிக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தைப் பொறுப்பாளர் பட்டியலில் இல்லாத தலைமைக் கழக நிர்வாகிகள் புறக்கணித்துவிட்டனர்.

இந்நிலையில் அதிமுக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுடன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (நவம்பர் 3) ஆலோசனை நடத்தினர். வழக்கம்போல மேடையில் மதுசூதனன், ஓ.பன்னீர்,. எடப்பாடி பழனிசாமி, வைத்தியலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோர் அமர்ந்திருந்தனர். அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட 84 பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு பற்றியும், செலவு செய்வது பற்றியும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. பொறுப்பாளர்களில் சிலர், “இடைத்தேர்தல் இப்ப வந்துடும்னு சொல்றாங்க... எம்.பி. எலக்‌ஷனோடுதான் வரும்னு சொல்றாங்க. உண்மையிலயே எப்பதான் வரும்” என்று கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறுவதற்காகத்தான் உங்களை எல்லாம் பொறுப்பாளராக போட்டிருக்கோம். இப்பவே தேர்தல் வேலைகளை ஆரம்பிச்சிடுங்க. தேர்தல் எப்ப வேணும்னாலும் வரட்டும்” என்று சிரித்துக்கொண்டே பதில் சொல்லியிருக்கிறார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...