சென்னை: தென் தமிழகத்தில் அதிக மழை பெய்வதால் அங்கு ரெட் அலர்ட் விடுக்கும் சூழல் நிலவுகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்தார்.
தமிழகம், தென் கர்நாடகம் மற்றும் கேரளத்துக்கு அதிக மழை பொழிவை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி தொடங்கியது. காலதாமதமாக தொடங்கிய போதிலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
முதல் நாள் அன்றே ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழையால் கோபியில் உள்ள குளம் நிரம்பி வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது.
[வடகிழக்கு பருவமழை.. குமரி, மதுரை மாவட்டங்களில் நல்ல மழை.. டெல்டா மாவட்டங்களில் எப்போது?]
குமரி
நல்ல மழை
இந்நிலையில் குமரி, தூத்துக்குடி, நெல்லை, நாகை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், தென் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
முதல் முறை
ரெட் அலர்ட்
முதல் முறையாக நெல்லையில் 286 மி.மீ. மழை பெய்துள்ளது. இதனால் மணிமுத்தாறு அணை நிரம்பியுள்ளது. இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் தென் தமிழகத்தில் அதிகபடியான மழையால் முதல் முறையாக 204.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் ரெட் அலர்ட் விடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வாய்ப்பு
எங்கு மழை
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, நாகை, தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
மீண்டும் அதிக மழை
தீபாவளிக்கு பாதிப்பில்லை
இன்றும் தூத்துக்குடி, நெல்லை, குமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பொழிவு ஏற்படும் சூழல் நிலவுகிறது. தீபாவளி பண்டிகைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.