ஒன்பது, பத்தாம் வகுப்பை சேர்ந்த மாணவியருக்கு கராத்தே பயிற்சி

ஈரோடு மாவட்டத்தில், 49 அரசு உயர்நிலை பள்ளிகளில்,
மாணவியருக்கு மூன்று மாத கராத்தே தற்காப்பு பயிற்சி வகுப்பு, நடந்து வருகிறது*


*இதுபற்றி, ஈரோடு மாவட்ட கராத்தே ஸ்போர்ட்ஸ் சங்க செயலாளர் சக்திவேல் கூறியதாவது*


*பள்ளி கல்வித்துறையில், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு தற்காப்பு கலையை கற்பிக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளது*


*இதன்படி, தமிழகம் முழுவதிலும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவியருக்கு மட்டும், கட்டா மற்றும் கும்டே பிரிவில் உள்ள தற்காப்பு அம்சங்கள் குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது*


 *அந்தந்த மாவட்டத்தில், பதிவு பெற்ற சங்கம் மூலம், பெண் கராத்தே பயிற்சியாளரால் வழங்கப்படும். நவ., 1ல் தொடங்கிய பயிற்சி, மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும்*


*ஈரோடு மாவட்டத்தில், 49 அரசு உயர்நிலை பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, வாரத்தில் குறிப்பிட்ட இரண்டு நாட்கள், மாலை, 3:30 மணி முதல், 4:30 மணி வரை பயிற்சி வழங்கப்படும். பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அல்லது அதற்கு இணையான பெண் ஆசிரியர், பயிற்சியின்போது உடனிருப்பர். இவ்வாறு அவர் கூறினார்*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...